தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக குமரேஷ் பாபு மற்றும் ஸ்ரீ சரண் ஆகியோரை நியமித்து, தலைமைச் செயலர் சண்முகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.