ETV Bharat / state

சீமானுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கும் விஜயலட்சுமி! - vijayalakshmi complaint against seeman

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

Vijayalaskhmi Video
vijayalakshmi
author img

By

Published : Mar 10, 2020, 10:26 AM IST

Updated : Mar 10, 2020, 2:22 PM IST

விஜய், சூர்யா உள்ளிட்டோர் நடித்த ப்ரண்ட்ஸ், வாழ்த்துகள், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி. இவர் நடிப்பில் உச்சத்தில் இருந்தபோது, படங்கள் இயக்குவதில் பிஸியாக இருந்த சீமானுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரும் ஒன்றுக்கு ஒன்றாகப் பழகிவந்தது திரைத் துறையினர் அனைவரும் கேட்டு புளித்த கதைதான் என்றாலும்கூட, இருவருக்கும் இடையேயான பழக்கம் என்பது பொதுவெளிக்கு இன்றும் ரகசியம்தான். அவரவர் அனுமானங்களுக்கு ஏற்றார்போல் பல்வேறு கட்டுக்கதைகளையும் அவிழ்த்துவிடுவதுமுண்டு.

இதற்கிடையேதான், அரசியலில் கால்பதித்தார் சீமான். அதற்கு முன்புவரை கதைகளைப் படமாக்கியவர், பின்னர் பிரபாகரனுடன் தான் எடுத்த 'படத்தை' கதையாக்கினார். அங்கிருந்துதான் தொடங்கியது சீமானின் அரசியல். அதுவரை உயிரற்று இருந்த சி. பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சிக்கு உயிரூட்டி, அதனை நிர்வகிக்கவும் தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை மணமுடித்து குடும்பம், கட்சி என்று செட்டில் ஆகிவிட்டார்.

ஆனால், விஜயலட்சுமி விவகாரம் மட்டும் முடிந்தபாடில்லை. சீமானின் தம்பிகள் அவரை தொடர்ந்து வம்பிழுப்பதும் வசைபாடுவதுமாய் நகர்கிறது நாள்கள்.

ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி, சீமானின் சில காணொலிகளை வெளியிட்டு வைரலாக்கினார். ஆனால், அவரது தம்பிகளோ, 'இது எங்கள் அண்ணனே கிடையாது; மார்ஃபிங் செய்யப்பட்டுள்ளது' என்று அடித்துக் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இதை ரஜினியிடம் எடுத்து சொல்லுங்கள் -கண்ணீர் வடிக்கும் விஜயலட்சுமி

இந்த நிலையில், நாம் தமிழர் மேடைகளில் விஜயலட்சுமியை அருவருக்கத்த பேசுவதும் அசிங்கமான வார்த்தைகளில் அர்ச்சிப்பதும் கேட்கத்தான் செய்கிறது.

அரசியல் மேடையேறும் பேச்சாளர்கள் தங்களின் எதிரிகளை வசைபாடுவது வழக்கம். இங்கே நாம் தமிழரின் எதிரி யார் என்பதை மறந்து சீமானுக்கும், விஜயலட்சுமிக்கும் இடையேயான தகராறை கட்சியின் கொள்கை கோட்பாடாக மேடைகளில் முழங்கப்பட்டுவருவது முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vijayalaskhmi Video

இந்நிலையில், திருவான்மியூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் வசிக்கும் விஜயலட்சுமி, தனது சகோதரியுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், சீமானும் அவரது ஆதரவாளர்களும் கட்சி மேடைகளில் தன்னைக் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிவருவதாகவும், இதனால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகார் மனுவில் கோரியிருந்தார். இதனைப் பார்த்த காவல் ஆணையரகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமிக்கு பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க: ரஜினிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி

Last Updated : Mar 10, 2020, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.