தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. இவர் தற்போது 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கருணாகரனுடன் இணைந்து நடிக்கின்ற படம் 'பன்னிகுட்டி'.
அனுசரண் முருகையா இப்படத்தை இயக்குகிறார். 'ஆண்டவன் கட்டளை', '49-0' ஆகிய படங்களில் இசையமைத்த அனுசரண் இப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். 'கிருமி' படத்திற்குப் பிறகு அனுசரணும் இவரும் இரண்டாவது முறையாக இணையும் படம்.
இப்படத்தில் சிங்கம் புலி, திண்டுக்கல் ஐ.லியோனி, டி.பி.கஜேந்திரன், லக்ஷ்மி பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் சுபாஷ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்து போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கருணாகரனும், யோகிபாபுவும் சேர்ந்து பன்னிக்குட்டி ஒன்றை துரத்திப் பிடிப்பது போன்று உள்ளது.