ETV Bharat / state

"தனுஷ் படத்தில் நான் இல்லை" - மறுப்பு அறிக்கை வெளியிட்ட விஷ்ணு - லால் சலாம்

தனுஷ் 50 படத்தில் நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வந்த நிலையில் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

vishnu vishal
விஷ்ணு விஷால் டிவிட்டர் பக்கம்
author img

By

Published : Jun 14, 2023, 1:32 PM IST

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர்‌. தற்போது தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், அஜித், சூர்யாவுக்கு அடுத்தபடியாக பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். அதுமட்டுமின்றி இயக்குனராகவும் தனது திறமையை நிரூபித்தவர். இவர் இயக்கிய ”பவர் பாண்டி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. படத்தின் நாயகனாக ராஜ்கிரண்மற்றும் ஜோடியாக ரேவதி நடித்தனர் இது இயக்குனராக மிக பெரிய வெற்றியை கொடுத்தது.இதனை தொடர்ந்து படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியானார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து தனுஷ் தரப்பிலிருந்தோ படக்குழுவிலிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முன்னதாக,நாகர்ஜுனா நடிக்கும் படத்தை இயக்க இருந்தார் ஆனால் சில காரணங்களால் அந்த படம் நின்றுபோனது. தற்போது ”தனுஷ் 50” படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் இதை தனுஷே இயக்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

மேலும் இந்த படம் அண்ணன் , தம்பிகளை பற்றிய கதை என்றும் இதில் விஷ்ணு விஷால், எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரும் தனுஷின் சகோதரர்களாக நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வந்த நிலையில் விஷ்ணு விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

நான் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்துகள் முற்றிலும் உண்மையல்ல. அதில் நான் இருக்க விரும்பினாலும் என்னால் நடிக்க முடியாது. நான் ஒப்புக்கொண்ட என்னுடைய மற்ற படங்களின் பணி காரணமாக என்னால் நடிக்க முடியவில்லை. ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.என்று டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் கடைசியாக நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

விஷ்ணு விஷால் அளித்துள்ள இந்த விளக்கம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அந்த புதிய படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Unfortunately all the rumours which are doing rounds about me being a part of ‘ the movie’ is untrue …
    Although i would have loved to be a part of it ..

    Just to clarify…

    I could not accomodate it because of my other commitments…
    Best wishes to the team..
    Sorry to all the…

    — VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) June 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:"அறியாமையில் பேசும் அண்ணாமலை" - டிடிவி தினகரன் கிண்டல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.