ETV Bharat / state

லியோ படத்தில் பணிபுரிந்த 1300 பேருக்கு சம்பளம் நிலுவை..! அலைக்கழிக்கப்படும் நடனக் கலைஞர்கள்! - நடனக் கலைஞர்கள் விவகாரம்

Leo movie dancers issue: "லியோ" படத்தின் நா ரெடி பாடலில் பணிபுரிந்த நடனக் கலைஞர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாததால், தயாரிப்பாளர் அலுவலகத்திற்கும், காவல் நிலையத்திற்கும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்

1300 நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் நிலுவை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 10:33 PM IST

Updated : Oct 10, 2023, 10:54 PM IST

நடனக் கலைஞர்கள் புகார்

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "லியோ" படம், இம்மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.‌

"லியோ" படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, சமூக வலைத்தளங்களில் டிரெண்டானது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள "நான் ரெடி" என்ற பாடலுக்கு நடனம் ஆடிய நடனக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

இப்பாடலில் சுமார் 1300 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுக்கு, படக்குழு சார்பில் இதுவரையிலும் ஒரு ரூபாய் சம்பளம் கூட கொடுக்கவில்லை என்று நடன கலைஞர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதுகுறித்து நடன கலைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

"லியோ" படத்தின் நான் ரெடி தான் பாடலுக்கு நடனமாடுவதற்காக, சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் ஆடிஷன் நடத்தி, அந்த ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1300 நடன கலைஞர்களுக்கு தலா 20,000 ரூபாய் சம்பளம் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து சென்னை பனையூரில் நடைபெற்ற இந்த பாடலுக்கான படப்பிடிப்பு 8 நாட்கள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 6 நாட்களிலேயே பாடலின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடிந்துள்ளனர். அதன்படி சொல்லப்பட்ட 6 நாட்களுக்கான சம்பளமாக 16,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும், அதற்காக ஒவ்வொரு நடனக் கலைஞர்களிடம் இருந்து அவரவர் வங்கி கணக்கு விவரங்களை பெற்றதாகவும் கூறப்படுகின்றன.

இந்நிலையில் பாடலுக்கான படப்பிடிப்பு முடிந்து 4 மாதங்கள் கடந்தும், மேலும் வெளியாக இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் நடனமாடிய 1300 நடன கலைஞர்களுக்கு ஒரு ரூபாய் கூட படக்குழு சம்பளம் தரவில்லை என்று நடனக் கலைஞர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக நேற்று (அக்.10) அப்படத்தின்‌ தயாரிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளனர். இருப்பினும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், நடன கலைஞர்கள் புகார் அளிக்க சென்றுள்ளனர். அவர்களது புகாரை வாங்க மறுத்த போலீசார், மீண்டும் தயாரிப்பாளர் அலுவலகத்தில் சென்று கேட்குமாறு கூறியதாக தெரியவருகிறது.

இதனையடுத்து நடன கலைஞர்கள் 1300 பேருக்கும் "லியோ" படத்தின் தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்து சம்பளம் பணம், வங்கி மூலமாக செலுத்தப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 16,000 ரூபாய் வழங்கப்பட வேண்டிய நிலையில், வெறும் 7000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.‌

அதிலும் சிலருக்கு 1000, 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.‌ இதுகுறித்து கேட்டால் இவ்வளவு தான்‌ கொடுக்க முடியும் என்றும், யார் அழைத்து வந்தார்களோ அவர்களிடம் சென்று கேளுங்கள் என்று தயாரிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்த நடனக் கலைஞர்கள், தி.நகர்‌ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களின் உழைப்பிற்கான ஊதியத்தை பெறுவதற்காக காவல் ஆணையர் அலுவலகம், தயாரிப்பாளர் அலுவலகம், காவல் நிலையம் என நடனக் கலைஞர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோபி சாந்தா To மனோரமா ஆச்சி.. சிகரம் தொட்ட நடிப்பு ராட்சசி நினைவு நாள் இன்று!

Last Updated : Oct 10, 2023, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.