ETV Bharat / state

அந்த பையன புடிங்க.. சட்டம் ஒரு இருட்டறையின் மூலம் விஜயகாந்த் மிளிர்ந்தது எப்படி?

Actor Vijayakanth: நடிகர் முதல் அரசியல் தலைவர் வரை கேப்டன் விஜயகாந்த் கடந்து வந்த பாதைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 3:22 PM IST

சென்னை: தன் நடிப்புத் திறமையாலும், ஆளுமையாலும் விஜயராஜ் எனும் தன் பெயரை மறக்கடிக்கச் செய்து, கேப்டன் என மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நடிகர், விஜயகாந்த். 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுசபுரம் என்ற ஊரில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு மகனாக பிறந்த பிறந்த விஜயராஜ், மதுரை திருமங்கலத்திற்கு குடிபெயர்ந்து, அங்கு 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சினிமா ஆர்வம்: சிறு வயதிலேயே சினிமா பார்க்கும் வாய்ப்பு கிடைத்த விஜயராஜுக்கு, அதன் மீது ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியதால், நண்பர்களோடு சேர்ந்து சினிமாவுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்சன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்ததால், அவரது படங்களை பலமுறைப் பார்த்து ரசித்திருக்கிறார். மேலும், தான் பார்த்த திரைப்படங்களின் கதைகளை நண்பர்களிடம் காட்சிகளாக விவரித்துப் பேசி மகிழ்வாராம்.

இவ்வாறு சினிமா ஆர்வத்தோடு இருந்து வந்த விஜயராஜ், அதன் பிறகு படிப்பின் மீது ஆர்வம் காட்டாததால் அவரது தந்தை கீரைத்துரையில் இருக்கும் அவரது அரிசி ஆலையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை, விஜயராஜிடம் ஒப்படைத்துள்ளார். அரிசி ஆலையை கவனிக்கும் பொறுப்பில் ஈடுபட்டிருந்த விஜயராஜ், அவரது நண்பர்களின் உந்துதலாலும், தனக்கிருந்த சினிமா ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பதென முடிவு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ் படங்களை வாங்கி வெளியிட்டு வந்த சேனாஸ் பிலிம்ஸ் சினிமா விநியோகஸ்தர் முகமது மர்சுக்கின் அலுவலகம் இருந்த கட்டிடத்தில் தங்கி இருந்த விஜயராஜுக்கு, முகமது மர்சுக்குடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், தனது நடிக்கும் எண்ணத்தைப் பற்றி அவரிடம் தெரிவித்திருக்கிறார்.

சினிமாவில் அறிமுகமாக வாய்ப்பு: அந்த நேரத்தில் இயக்குநர் பி.மாதவன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருந்த ‘என் கேள்விக்கு என்ன பதில்’ எனும் படத்தை மதுரை ஏரியாவிற்கு வாங்கி இருந்தார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக். இந்நிலையில் விஜயராஜின் நடிப்பு வாய்ப்பு குறித்த கோரிக்கையை மனதில் வைத்திருந்த முகமது மர்சுக், ஒருநாள் விஜயராஜை சென்னைக்கு வரவழைத்து, இயக்குநர் பி.மாதவனிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது ரஜினியைப் போன்ற முடிவெட்டும், ஸ்டைலுமாக இருந்த விஜயராஜைப் பார்த்ததும், இயக்குநர் பி.மாதவனுக்கு பிடித்துவிட்டது. அதனால் அவரை அப்படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க வைத்துவிடலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பின் சாலிகிராமத்தில் இருந்த சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகத்தில் தங்கியவாறு பல கம்பெனிகளுக்கு வாய்ப்பு தேடி அலைந்துள்ளார் விஜயராஜ். அந்த நேரத்தில் சுதாகர், ராதிகா நடிப்பில் ‘இனிக்கும் இளமை’ படத்தை தொடங்கியிருந்த தனது நெருங்கிய நண்பர் இயக்குநர் எம்.ஏ.காஜாவிடம் விஜயராஜுக்கு சிபாரிசு செய்து, அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.

விஜயராஜை நேரில் வரவழைத்துப் பார்த்த எம்.ஏ.காஜா, தனது இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை விஜயகாந்துக்கு வாங்கினார். பல்வேறு அவமானங்கள் மற்றும் புறக்கணிப்புகளுக்கு மத்தியில், 1979ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயராஜ். அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் ‘அகல்விளக்கு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

விஜயகாந்தை விரட்டி பிடித்த இயக்குநர்: அதன் பின் ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்திற்கு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபுவிடம் கதை சொன்னபோது ஆக்சன் கதையாக இருக்கிரது என பிரபு தயங்கியதால், அந்த வாய்ப்பு விஜயராஜிடம் சென்றது. இந்த படம் வெற்றிப் படமாக இருந்தது. ஒரு நாள் எஸ்.ஏ.சந்திரசேகர் தன் உதவி இயக்குநர்களுடன் வாகினி ஸ்டுடியோ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயராஜின் நெருப்பு கண்களைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்து போய்விட்டதாம். உடனே அவரை பிடிக்கச் சொல்லி உதவியாளரிடம் கூறவும், அவர்கள் விஜயராஜை விரட்டிச் சென்று அழைத்து வந்துள்ளனர்.

அப்போது நான் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறீர்களா என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயராஜிடம் கேட்க, நான் நடிக்கத்தான் முயற்சி செய்து வருகிறேன். இப்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன் என கூறியுள்ளார் விஜயராஜ். இதையடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை படம் தமிழில் மிகப்பரிய வெற்றிப் படமாக அமைந்ததை அடுத்து, எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படத்தை சிரஞ்சீவியை நடிக்க வைத்து தெலுங்கு மொழியிலும் எடுத்தார். இந்த படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவப்பு மல்லி, நெஞ்சிலே துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, பட்டணத்து ராஜாக்கள், சாட்சி, நீதியின் மறுபக்கம், வசந்தராகம் எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார் விஜயராஜ்.

வெற்றி மகுடம் சூடிய திரைப்படங்கள்:

  • வைதேகி காத்திருந்தாள்
  • அம்மன் கோவில் கிழக்காலே
  • நினைவே ஒரு சங்கீதம்
  • ஊமை விழிகள்
  • கூலிக்காரன்
  • உழவன் மகன்
  • தெற்கத்திக் கள்ளன்
  • பூந்தோட்ட காவல் காரன்
  • செந்தூரப்பூவே
  • புலன் விசாரணை
  • சின்ன கவுண்டர்
  • வானத்தைப்போல
  • ரமணா
  • சொக்கத்தங்கம்

என எண்ணற்ற படங்கள் விஜயராஜின் வெற்றி மகுடத்தை அலங்கரித்தன.

கேப்டனாக உருவானது எப்போது? இந்நிலையில் இயக்குநர் செல்வமணியின் இயக்கத்தில் விஜயராஜின் நூறாவது படமாக உருவானது ‘கேப்டன் பிரபாகரன்’ படம். பல நடிகர்களுக்கு அவர்களது நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயராஜின் 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறுநாள் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி, வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகுதான் நடிகர் விஜயராஜ் ‘கேப்டன் விஜயகாந்த்’ ஆக மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

விஜயகாந்த் பெற்ற விருதுகள்: 153க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984ஆம் ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். இதன் பின்னர் அவர் நடித்த ‘செந்தூரப்பூவே’ படத்திற்காக அவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் பெற்றார்.

நடிகர் சங்கத்தில் விஜயகாந்தின் சாதனை: 1999ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி, பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்த கேப்டன் விஜயகாந்த், அதற்காக ஒரு பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

பொது நல பிரச்னைகளுக்கு குரல்: 2002ஆம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்னை உச்சத்தில் இருந்தது. அப்போது, கேப்டன் விஜயகாந்த் இயக்குநர் அமைப்புடன் இணைந்து, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து `நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை’ எனும் முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார். இதன்பின், 1990ஆம் ஆண்டு பிரேமலதாவுடன் திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

அரசியலுக்கு வந்தது எப்போது? இவர் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் 14-இல் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் பெயரில் மதுரையில் கட்சி ஒன்றை ஆரம்பித்து, அரசியல் பயணத்தை தொடங்கினார். 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் இவரது கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் பல இடங்களில் கணிசமான வாக்குகள் பெற்று அப்போதிருந்த கட்சிகளுக்கு மத்தியில் தனிப்பெரும் கட்சியாக உருவானது.

கேப்டனின் கடைசி படம்: அவரது முதல் தேர்தல் களமான விருதாச்சலம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். இதனால் விருத்தாசலம் தொகுதி மக்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவரது திரைப் பயணத்தின் கடைசி படத்தை முதல் முறையாக சொந்தமாக அவரே இயக்கி, அதற்கு ‘விருதகிரி’ என பெயரிட்டார். இந்த படமே இவருக்கு கடைசி படமாக அமைந்தது. இதன் பின்னர் படங்கள் நடிப்பதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட கேப்டன் விஜயகாந்த், பின் முழு நேரமாக அரசியலில் ஈடுபட தொடங்கினார்.

இதையும் படிங்க: ரைஸ்மில் முதல் கோட்டை வரை..! விஜயராஜ் கேப்டன் ஆன கதை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.