நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள "வாரிசு" படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் நடித்துள்ள படம் "வாரிசு". பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
ஏற்கெனவே வாரிசு படத்தின் முதல் பாடல் 'ரஞ்சிதமே' வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. குறிப்பாக, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கில் பார்வைகள் சென்று சாதனைப் படைத்து வருகிறது.
இந்நிலையில், வாரிசு படத்தின் 2ஆம் பாடலான தீ தளபதி பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய், தன் கலைப் பயணத்தைத் தொடங்கி 30 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, தீ தளபதி பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாடல் ரிலீஸான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் பயங்கர டிரெண்டாகி வருகிறது. பாடலை பாடியுள்ள நடிகர் சிம்பு, முன்னோட்ட காட்சிகளிலும் நடித்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
பாடலில் வரும்
’தீ.. இது தளபதி.. பெயரை கேட்டா விசிலடி
தீ.. இது தளபதி.. உங்கள் நெஞ்சின் அதிபதி’
என்ற கவிஞர் விவேக்கின் பாடல் வரிகள், நடிகர் விஜய் ரசிகர்களின் ஹம்மிங் வார்த்தைகளாக மாறி வருகின்றன.
இதையும் படிங்க: 30 Years of Vijayism: சோதனைகளை கடந்து சாதனை படைத்த தளபதி விஜய்!