சென்னை: இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவ்வழக்கை, விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ததுடன் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்த நடிகர் விஜய், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி அளித்த உத்தரவுக்கு தடை விதித்து, விஜய் செலுத்த வேண்டிய வரியை வணிகவரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டு சொல்ல வேண்டும் என்றும் மீதியுள்ள 80 விழுக்காடு வரியை ஒருவாரத்தில் கட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து நடிகர் விஜய் இறக்குமதி காருக்கு ரூ. 40 லட்சம் நுழைவு வரியை செலுத்தியுள்ளார். முன்பே ரூ. 8 லட்சம் கட்டிய நிலையில் மீதமுள்ள ரூ. 32 லட்சத்தையும் நடிகர் விஜய் செலுத்திவிட்டதாக வணிகவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இணையும் விஜய் -தனுஷ் கூட்டணி... உற்சாகத்தில் ரசிகர்கள்!