சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று (டிச.28) காலமானார். இந்த நிலையில், இன்று இரவு 10.20 மணியளவில், அவரது உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் இருவருக்கும் தனது ஆறுதலை விஜய் தெரிவித்தார். விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்கு முன்னதாக, விஜயகாந்தின் முகத்தை உற்று நோக்கியபடியே சில விநாடிகள் நின்றிருந்தார், நடிகர் விஜய்.
இதையும் படிங்க: “அந்த ஒருமாத கால அவகாசம்தான்”.. கள்ளழகர் படத்தில் விஜயகாந்த் மூலம் சோனு சூட் அறிமுகமானது எப்படி?