ETV Bharat / state

வெற்றியோ... தோல்வியோ... சிறு சிரிப்பில் கடப்பவர்! - tamil cinema

கடின பயணத்தில் 47ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

hbd vijay
hbd vijay
author img

By

Published : Jun 22, 2021, 12:44 AM IST

Updated : Jun 22, 2021, 1:43 AM IST

‘விஜய்’ என்ற ஒற்றைச் சொல்லைக் கேட்டாலே இளைஞர்கள் மத்தியில் எழும் நடனம் அடங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆகும். இந்த பெயருக்காக எளியவர்களின் துயர் துடைத்துவரும் இளைஞர்கள் ஏராளம்.

இளைய தளபதி, அண்ணா, தலைவா

மக்கள் மத்தியில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை, சினிமா ஹீரோ என்பதை தாண்டி பல தங்கைகளின் அண்ணனாகவும், நம்ம வீட்டு பிள்ளையாகவும் இருந்துகொண்டிருக்கிறார். விஜய்யின் ஆரம்பம் அவமானத்தின் ஆழம். ஆனால் அவர், தனது தந்தை போட்டு கொடுத்த பாதையில் தன்னை நிரூபித்து நிற்கிறார்.

"நாளை காலை விடிந்தால் தெரியும் விஜய்யை கோடம்பாக்கம் ஒதுக்கும்" என்று பேசப்பட்ட சூழலில் நாளைய தீர்ப்பு மூலம் விஜய் வந்து இன்றும் ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கிறார், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறார் என்றால் அவர் உழைப்பு அவ்வளவு சாதாரணம் இல்லை.

ஆரம்பமும் அவமானமும்
ஆரம்பமும் அவமானமும்

தமிழ் சினிமா கண்டுகொள்ளாத நடிகர்களில் ஒருவராகத்தான் இவர் இருந்தார் ஆனால் அவர் கண்டுகொள்ள மாட்டாரா என அத்தனை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடன இயக்குநர்களும் காத்திருக்கின்றனர். காரணம் தளபதி என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு....

உலகத்துக்கான இந்திய முகம் இந்தியாவின் அடையாள முகம், தமிழ்நாட்டின் தற்போதைய முதல் முகம் என எத்தனை முகங்கள் இருந்தாலும் விஜய்யின் முகம் எளிமை.

பூவே உனக்காகவில் நடித்து புவியே உனக்காக என்று அனைவரையும் சொல்ல வைத்தார்.

தமிழ் சினிமாவின் முதல் ஹீரோ தியாகராஜ பாகவதர் தொடங்கி தற்போதைய ஹீரோவரை அனைவரும் பாடல் மூலமே வளர்ந்தனர். ஆனால் பாடல் மூலம் மக்கள் மனதில் நிலைத்தது எம்ஜிஆர், ரஜினி, விஜய்.

வெற்றியை கண்ட தோல்வி
வெற்றியை கண்ட தோல்வி

காதல் நாயகனாக வலம் வந்தாலும் தன்னை மாஸ் ஹீரோவாகவும் தன்னை வெளிப்படுத்த முயற்சித்தார். தன் மீதான பிரபல இயக்குநர்களின் பார்வையை மாற்ற விரும்பிய விஜய் புதிய அவதாரத்திற்கு புதுமுக இயக்குநர்களை நம்பத்தொடங்கினார்.

வாய்ப்பின் வலி அறிந்த இவர், புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பளித்து ஒட்டுமொத்தமாக தன்னை மாறிகொண்டு திருமலை என்ற படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தினார்.

இதன் வழியே புதுமுக இயக்குநர்களுடன் பயணத்தை தொடங்கிய விஜய், மாஸ் ஹீரோ என்ற கயிறை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

சந்திரன் vs இந்திரன்
சந்திரன் vs இந்திரன்

அவ்வப்போது காதல் நாயகனாக வெளிகொணர தவறவில்லை. தனித்துவமும் திறமைகளும் தாண்டி

பின்னணி பாடகர் என்ற அந்தஸ்தை அடைந்தவர்.

சினிமாவில் காலடி பதித்தது முதல் தற்போது வரை தன் தனித்துவத்தை என்றுமே இவர் வளர்த்தெடுக்க தவறியதில்லை.அமைதி என்ற ஆயுதத்தை கையாளும் நேர்த்தி தெரிந்தாலும் சில இடங்களில் வெகுண்டு பொங்கியெழுத்துள்ளார். அதையும் நாம் கண்டதுண்டு.

தன்னை ஒருநிலையோடு வைத்து மெருகேற்றிக் கொள்வதில் இருக்கிறது இவரது உழைப்பும், வெற்றியும்.

தனித்துவமும் திறமைகளும்
தனித்துவமும் திறமைகளும்

ஈழ பிரச்னைக்கு கொதித்து பேசியது, ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு வெடித்து மெரினாவுக்கு சென்றது, நீட்டால் கொல்லப்பட்ட தங்கை அனிதா விட்டுக்கு நொந்து போய் சென்றது என எந்த ஆடம்பரமும் இன்றி சமூகத்தோடு தன்னை கலந்தார் அவர்.

அதன் பிறகு இவர் அரசியலை ஒதுக்கினாலும் இவரை அரசியல் ஒதுக்க வில்லை.

அரசியல் துளிகள்
அரசியல் துளிகள்

சூப்பர் ஸ்டார் என்றால் எளிதானது இல்லை. முக்கியமாக ரசிகர்களை கையாள தெரிய வேண்டும். அதில், விஜய் கைதேர்ந்தவர்; படத்தில் எந்தக் காட்சியாக இருந்தாலும் அதனை சரியான முறையில் கையாண்டு ரசிகர்களை எளிதாக அணுகிவிடுவார்.

இந்த தலைமுறை இளைஞர்கள் தனக்கான கதாநாயகனை தேடும் போது அந்த இடத்தில் விஜய் முதல்தான் இடத்தில் இருப்பார்.

ரசிகர்களுக்கு விருந்து
ரசிகர்களுக்கு விருந்து

இக்கால இளைஞர்கள் மட்டுமில்லை எக்கால இளைஞர்களும் விஜயை கொண்டாடுவர். ஏனெனில் தளபதி என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு... பிறந்தநாள் வாழ்த்துகள் தளபதி.

Last Updated : Jun 22, 2021, 1:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.