ETV Bharat / state

'எனது மகள் திரைத்துறைக்கு வருவதில் விருப்பமில்லை' - நடிகர் சரத்குமார் - கொன்றால் பாவம் திரைப்படம்

’எனக்கு வரலட்சுமி திரைத்துறைக்கு வருவதில் விருப்பமில்லை’ என ‘கொன்றால் பாவம்’ திரைப்படத்தின்‌ ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 1, 2023, 3:41 PM IST

சென்னை: தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள ‘கொன்றால் பாவம்’ திரைப்படத்தின்‌ ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (மார்ச்.1) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் தாணு, நடிகர்‌ சரத்குமார், சந்தோஷ் பிரதாப், வரலட்சுமி சரத்குமார், சார்லி, இசை அமைப்பாளர் சாம் சி.எஸ். உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் தாணு, ''வாரிசு படத்தில் சரத்குமாரின் பண்பட்ட நடிப்பை பார்த்து வியந்தேன். ‘கொன்றால் பாவம்’ படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடித்தது சிறப்பு; இயக்குநருக்கு வாழ்த்துகள். வரலட்சுமி எங்கள் குடும்பத்தின் நாயகி. சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்'' என்றார்.

தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ''இப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியாகவுள்ளது. இது ஒரு இயற்கையான படம். இயக்குநர், இசை ஞானம் மிக்கவர். எனக்கு சின்ன படம், பெரிய படம் என்ற பாகுபாடு கிடையாது. மியூசிக்கல் படமாக இப்படம் எனக்கு கிடைத்துள்ளது. நீங்களும் இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்'' என்றார்.

நடிகர் சார்லி
நடிகர் சார்லி

தொடர்ந்து சார்லி பேசுகையில், ''இப்படம் எனது திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம். வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. நான் நிறைய படங்களில் அப்பாவுடன் நடித்து அவர்களின் மகன்களுடனும் நடித்துள்ளேன். அப்பாவுடன் நடித்து மகளுடன் நடிப்பது இதுவே முதல்முறை. எனது இத்தனை வருட திரை அனுபவத்தில் நாடகத் திறமையுடன் இருக்கும் நடிகை வரலட்சுமி தான். சந்தோஷ் பிரதாப் மிகவும் நிதானமானவர். நீங்கள் எதிர்பார்க்கும் எந்த விஷயமும் இப்படத்தில் இருக்காது. ஆனால், நீங்கள் ரசிக்கக்கூடிய விஷயம் இதில் இருக்கும்'' என்றார்.

சரத்குமார்
சரத்குமார்

மேலும், நடிகர் சரத்குமார் கூறுகையில், ''இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போதே சிறப்பான படமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் அழைத்தாலும் எனது மகள் வரலட்சுமி அப்பா வந்துடாதீங்க என்பார். சார்லி, நீங்கள் படித்து டாக்டர் பட்டம் வாங்கியுள்ளீர்கள். இன்றைய காலத்தில் அமைதியாக இருப்பதே நல்லது. வரலட்சுமி இன்று முழுமையான நடிகையாக இருப்பதற்கு காரணம் அவர்தான். எனக்கு அவர் திரைத்துறைக்கு வருவதில் விருப்பமில்லை. என் மகள் உண்மையில் விஜயசாந்திதான். வாழ்க்கையிலும் அதிரடி பண்ணக்கூடியவர், வரலட்சுமி.

வீரஷிம்மா ரெட்டி படத்தில் வரலட்சுமி நடித்த காட்சிகளை பாலகிருஷ்ணா என்னிடம் படத்தின்‌ வெளியீட்டுக்கு முன்பே போட்டுக் காட்டினார். ரஜினியிடம் ஒருநாள் கேட்டேன்; வரலட்சுமி பேசியது உங்களுக்கு புரிந்ததா என்று. அவர் என்னிடம்‌ கேட்டார், நான் பேசியது உங்களுக்கு புரிந்ததா என்று.‌ புரிந்தது என்றேன். அவரும் வரலட்சுமி பேசியது புரிந்தது என்றார். ஆனால், இப்படத்தில் மெதுவாக பேசியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் ஓடுகிற படங்கள் தான் வெற்றிப் படம். விமர்சனம் செய்ய எல்லோருக்கும் உரிமை உண்டு. எனக்கும் மானிட்டர் பார்க்கும் வழக்கம் இல்லை. அது நேரவிரயத்தை ஏற்படுத்தும்'' எனத் தெரிவித்தார்.

வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்

பின்னர் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், ''இப்படம் தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு திருப்தி கொடுத்த படம். ஒரு மனநிம்மதி கொடுத்துள்ளது. எனது அப்பாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது நிறைய உள்ளது'' என்றார்.

இதனைத் தொடர்ந்து, பேசிய சந்தோஷ் பிரதாப், “இப்படத்தில் எனக்கு முதல் படத்தில் நடித்தது போன்ற உணர்வு. சாம் சி.எஸ். மியூசிக் சிறப்பாக இருக்கிறது இப்படத்தில். நான் அமைதியானவன்‌ கிடையாது. ஜாலியான ஆள்தான். உடலை பேணுவதில் சரத்குமார் எனக்கு முன்னுதாரணமானவர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "நல்ல நண்பர்களை இழந்து விடாதீர்கள்; எனக்கு நண்பர்களே கிடையாது"- செல்வராகவன் வருத்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.