ETV Bharat / state

நீங்க வாங்க ரஜினி: அண்ணா அறிவாலயம் அருகில் போஸ்டர்! - திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம்

சென்னை: ‘நீங்க வாங்க ரஜினி..ஓட்டுனு போட்டா ரஜினிக்குதான்’ என அண்ணா அறிவாலயம் பக்கத்தில் ரஜினியின் போஸ்ரால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயம் பக்கத்தில் ரஜினியை அரசியலுக்கு வர சொல்லி ஒட்டப்பட்ட போஸ்ரால் பரபரப்பு!

author img

By

Published : Oct 30, 2020, 10:46 AM IST

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலுக்கு கால் பதிப்பார் என அவரது ரசிகர்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கைகள், செயல்பாடுகள் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்ற எண்ணத்தை ரஜினி ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

இதனையடுத்து, கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்தும், அவரது அரசியல் வருகை குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதற்கு நேற்று (அக். 29) தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.

அண்ணா அறிவாலயம் பக்கத்தில் ரஜினியை அரசியலுக்கு வர சொல்லி ஒட்டப்பட்ட போஸ்ரால் பரபரப்பு!
அண்ணா அறிவாலயம் பக்கத்தில் ரஜினியை அரசியலுக்கு வர சொல்லி ஒட்டப்பட்ட போஸ்ரால் பரபரப்பு!

இந்நிலையில் இன்று (அக். 30) திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அருகே ரஜினியை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ‘நீங்க வாங்க ரஜினி எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்... ஓட்டுனு போட்டா ரஜினிக்கு தான்!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...தேவர் சிலைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.