ETV Bharat / state

‘பிரச்னைகள் தீர வாக்களிப்பீர் எஸ்.ஏ.சந்திரசேகர்‌ அணிக்கு’ - ராதாரவி - ரமேஷ் கண்ணா

எழுத்தாளர்கள் சங்க உறுப்பினர்களின் பிரச்னைகள் தீர வேண்டும் என்றால், எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணிக்கு வாக்களிக்குமாறு நடிகர் ராதாரவி கேட்டுக்கொண்டார்.

s a chandrasekar  actor radharavi  writer union election  actor radharavi ask to vote for s a chandrasekar  ராதாரவி  எஸ் ஏ சந்திரசேகர்‌  எழுத்தாளர்கள் சங்க தேர்தல்  பாக்யராஜ்  ரமேஷ் கண்ணா  மனோஜ் குமார்
ராதாரவி
author img

By

Published : Sep 11, 2022, 7:54 AM IST

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். தற்போதுள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, 2022-2024 ஆண்டுகளுக்கான எழுத்தாளர்கள் சங்க தேர்தல் இன்று (செப் 11) காலை நடைபெறுகிறது.

இதில் வசந்தம் அணி சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்‌ தலைவர் பதவிக்கு நிற்கிறார். துணைத் தலைவர் பதவிக்கு மனோபாலா, ரவி மரியா போட்டியிடுகின்றனர். பொதுச் செயலாளர் பதவிக்கு இயக்குநர் மனோஜ் குமாரும் பொருளாளர் பதவிக்கு இயக்குநர் ரமேஷ் கண்ணாவும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு எதிராக பாக்யராஜ் எதிரணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணிக்கு வாக்களிக்குமாறு நடிகர் ராதாரவி கேட்டுக்கொண்டார்

இதுகுறித்து நடிகர் ராதாரவி பேசுகையில், “எஸ்.ஏ.சந்திரசேகர் கோடீஸ்வரன். உங்களுக்காக இங்கு வந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார். இந்த சங்கத்திற்கு தரமான கட்டடம் வேண்டும். மற்ற சங்கங்களுக்கு நல்ல கட்டடம் உள்ளது. உறுப்பினர்களின் பிரச்னைகளை தீர்க்க எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையிலான அணிக்கு வாக்களியுங்கள்” என்றார்.

இதையும் படிங்க: 'Qantityயை விட Quality தான் முக்கியம்...!’ - நடிகர் ஜெயம் ரவி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.