ETV Bharat / state

வீட்டில் லீசுக்கு இருந்தவரை வெளியேற்றி பூட்டு போட்ட நடிகர் நாகேந்திர பிரசாத் - பூட்டை உடைத்த போலீஸ்! - கிரைம் செய்திகள்

Actor Prabhu deva brother Nagendra prasad: சென்னையில் நடிகர் பிரபுதேவாவின் சகோதரரும் நடிகருமான நாகேந்திர பிரசாத் வீட்டில் லீசுக்கு இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு வீட்டை பூட்டி வெல்டிங் வைத்த நிலையில் காவல்துறையின் உதவியோடு கதவு திறக்கப்பட்டது

actor-prabhu-deva-brother-nagendra-prasad-evicted-the-lessee-from-his-house-and-locked-him-up
தனது வீட்டில் லீசுக்கு இருந்தவரை வெளியேற்றி பூட்டு போட்ட நடிகர் பிரபுதேவா சகோதர் நாகேந்திர பிரசாத் - பூட்டை உடைத்த போலீஸ்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 8:13 PM IST

சென்னை: சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் டி.நகர் பகுதியில் ஜெயம்மாள் தெருவில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வருகிறார். அந்த வீடு பிரபல நடிகர் பிரபுதேவாவின் சகோதரரும், நடிகருமான நாகேந்திர பிரசாத்துக்குச் சொந்தமான வீடு எனக் கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு விக்னேஷ் நடிகர் நாகேந்திர பிரசாத் இடம் வீடு வாடகைக்குக் கேட்டு உள்ளார். அப்போது நாகேந்திர பிரசாத் இந்த வீட்டினை கேர் டேக்கர் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு லீசுக்கு விட்டுள்ளதாகவும் அந்த நிறுவனத்தில் நீங்கள் ரூபாய் 25 லட்ச லீசுக்கு பணம் செலுத்துங்கள் அதன் பிறகு அந்த நிறுவனத்திடம் இருந்து தாங்கள் மாதம், மாதம் 36 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விக்னேஷ் இந்த வீட்டை லீசுக்கு எடுப்பதற்கு 25 லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்திற்குச் செலுத்தியுள்ளார். அந்த நிறுவனமானது திடீரென கடந்த ஒரு வருடமாக நாகேந்திர பிரசாத்திற்குப் பணத்தைத் தராமல் மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகியுள்ளது.

இதனால் நாகேந்திர பிரசாத் அந்த வீட்டிற்கான வாடகை பணம் வராததால் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த விக்னேஷை உடனடியாக காலி செய்யும்படி தொடர்ச்சியாக மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும் விக்னேஷ் நாங்கள் பணத்தைச் செலுத்தியுள்ளோம் தங்களால் வீட்டை காலி செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, நாகேந்திர பிரசாத் தனது நண்பர்களை அழைத்து வந்து விக்னேஷ் குடும்பத்தாரை வெளியே அனுப்பி விட்டு வீட்டைப் பூட்டி கிரில் கேட்டில் வெல்டிங் வைத்துள்ளார். இதனால், நேற்று (நவ.7) முழுவதும் விக்னேஷ் குடும்பத்துடன் வீடு இல்லாமல் வெளியே இருந்து வந்துள்ளார்.

இது குறித்து, விக்னேஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், போலீசார் உதவியுடன் பூட்டப்பட்ட கிரில் கேட்டை நாகேந்திர பிரசாத் முன்னிலையில் உடைக்கப்பட்டு விக்னேஷை வீட்டிற்குள் அனுப்பியுள்ளனர்.

மேலும், தான் செலுத்திய ரூபாய் 25 லட்ச லீஸ் தொகையைத் திருப்பி கொடுத்து விட்டால் தான் இந்த வீட்டை காலி செய்து விட்டுச் சென்று விடுவதாக விக்னேஷ் தரப்பில் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈசிஆரில் கணவன், மனைவியை மாற்றிக் கொள்ளும் மது, மாது விருந்து.. பலே கும்பல் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.