தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைப்பெறுகிறது. இதனையடுத்து தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவுக்கு சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகள், ஆதரவை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவருமான நடிகர் கார்த்திக், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை முகாம் அலுவலகத்தில் சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார்.