ETV Bharat / state

’ட்விட்டர் போலி கணக்கு குறித்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட போலீஸ்’ - நடிகர் சார்லி புகழராம் - காவல் ஆணையர் அலுவலகத்தில் சார்லி புகார்

சென்னை: சமூகவலைதளத்தில் தனது பெயரை வைத்து போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக நடிகர் சார்லி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

Charlie
Charlie
author img

By

Published : Jun 11, 2021, 7:57 PM IST

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்தவர் சார்லி. இவர் பெயரில் சமூகவலைதளப் பக்கமான ட்விட்டரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக, சென்னை, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சார்லி கூறியதாவது: ”ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற எந்த சமூகவலைதளப் பக்கத்திலும் நான் இதுவரை கணக்கு தொடங்கவில்லை. அப்படி இருக்கையில், எனது பெயரில் போலிக்கணக்கு தொடங்கப்பட்டிருப்பதாக எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அதன் பின் அந்தக் கணக்கை சென்று பார்த்த போது பல்லாயிரக்கணக்கானோர் அந்தக் கணக்கை பின் தொடர்ந்து வாழ்த்தி வரவேற்றிருப்பது தெரியவந்தது. நான் என் அன்பிற்குரிய நபர்கள், துறைகளை சந்தவர்களுடன் நேரடித் தொடர்பில் தான் இருந்து வருகிறேன். இதுவரை சமூகவலைதளப் பக்கங்களை பயன்படுத்தும் அவசியம் எனக்கு வரவில்லை.

செய்தியாளர்களை சந்தித்த சார்லி

எனது நண்பர்கள் அறிவுறுத்தலின் பேரில் என் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். புகார் அளித்த சில நிமிடங்களில் சைபர் க்ரைம் பிரிவு காவல் துறையினர், அந்தக் கணக்கை முடக்கியுள்ளனர். அந்தக் கணக்கை தொடங்கிய போலி நபர் குறித்தான விசாரணையையும் காவல் துறையினர் தொடங்கியுள்ளனர். ஒருவர் பெயரில் போலி கணக்கை தொடங்கி அதன் மூலம் லபாம் பெற நினைப்பது வேதனை அளிக்கிறது. என் பெயர் கொண்ட எந்த சமூகவலைதளப் பக்கங்களையும் யாரும் பின் தொடரவேண்டாம்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.