ETV Bharat / state

அரவிந்த் சாமி நடிக்கும் ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படம் "கள்ளபார்ட்" - kallapart

நடிகர் அரவிந்த் சாமி அடுத்து 'கள்ளபார்ட்' எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளர்

அரவிந்த் சாமி நடிக்கும் ஹைஸ்ட் திரில்லர் திரைப்படம் "கள்ளபார்ட்"

author img

By

Published : Apr 21, 2022, 3:52 PM IST

நடிகர் அரவிந்த் சாமி, ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ள படம் "கள்ளபார்ட்". பல ஆண்டுகளுக்கு முன்பு ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் ’கம்பேக்’ கொடுத்த அரவிந்த் சாமி, அதன் பின் சில படங்களின் தோல்வியால், சரியாக திரையுலகில் ஜொலிக்கமுடியாமல் ஆனது.

இதனையடுத்து, ‘போகன்’, ‘செக்கச் சிவந்த வானம்’ போன்ற திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு அரவிந்த் சாமிக்கு கிடைத்தது. இதனையடுத்து, கடந்த ஆண்டு வெளியான நெட்ஃபிளிக்ஸ் ஆண்டாலஜி திரைப்படமான ‘நவரசா’-வில் ‘ரௌத்திரம்’ எனும் திரைப்படத்தை இயக்கியதின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார், அரவிந்த் சாமி.

இந்நிலையில், தற்போது மூவிங் பிரேம்ஸ் திரைப்பட நிறுவனம் தயாரிக்கும் ’கள்ளபார்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ’என்னமோ நடக்குது’, ’அச்சமின்றி’ போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார், கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். மேலும், இத்திரைப்படத்தின் பாடல்களை கங்கை அமரன் மற்றும் சரஸ்வதி மேனன் எழுதியுள்ளனர்.

இந்தத் திரைப்படம் பற்றி இயக்குநர் P.ராஜபாண்டி கூறியதாவது, “படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ’கள்ளபார்ட்’ என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு ’கள்ளபார்ட்’ என்று பெயர் வைத்துள்ளோம். ஹெயிஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வுப்பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்தப் படத்தின் திரைக்கதை. இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தை இதில் பார்க்கலாம்.

படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரமாண்டமாக படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். அந்தக் காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படம் மே மாதம் வெளியாக உள்ளது” என்றார் இயக்குநர் P.ராஜபாண்டி.

இதையும் படிங்க: ஒரு படம் தோற்றால் கொண்டாடுவதா? ஆர்.கே. சுரேஷ் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.