தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ஒரு அமைப்புக்காக வேலை பார்த்து அதை பிரபலப்படுத்தினேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பிலிருந்து விலகினேன். அதை நடத்திய அஜித் ரவி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தேன், அவர் மூலம் 3 வருடங்களாக பாலியல் தொல்லையை அனுபவித்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “தற்கொலைதான் எனக்கு இருக்கும் ஒரே முடிவு எனவும் எனது தற்கொலைக்கு அஜித் ரவிதான் முழு காரணம் எனவும் சுஷாந்த் சிங் போன்று நான் இறந்த பிறகு அவரை தண்டிக்க வேண்டும்” என்றும் பதிவிட்டு தமிழ்நாடு முதலமைச்சரையும், பிரதமர் மோடியையும் டேக் (#tag) செய்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் சென்னை காவல் துறையினர் கூறியதாவது , "சமூக வலைதள பக்கம் மூலமாக நடிகை மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டை குறிப்பிட்டு, காவல் துறையினரிடம் புகார் அளித்தால், இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இங்கு இன்ஸ்டா, ட்விட்டர் விற்கப்படும் - மீரா மிதுன்