சென்னை: முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் புலவர் திருவள்ளுவரின் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா அப்பள்ளியின் தாளாளர் வேல்மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விஜிபி குழும தலைவர் வி.ஜி.சந்தோஷம் உள்ளிட்டோர் பங்கேற்று சிலையை திறந்து வைத்தனர்.
உலக மக்கள் கொன்டாடும் புலவர் திருவள்ளுவர் என்பதில் தமிழராக பெருமை. திருக்குறளை பல நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றனர். ஆங்கிலம் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட அயல் நாடுகளில் மொழி பயிர்த்து திருக்குறளை பயன்படுத்துகின்றனர். தமிழை படிக்கும் போது திருக்குறளை படியுங்கள், அதில் உங்களுக்கு என பொருத்தமான குறளை தேர்ந்தெடுத்து அதன் வழி நடக்க வேண்டும் என மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "சின்ன சேலம் விவகாரம் குறித்து கள சூழல், மற்ற மாணவர்களின் நிலை உள்ளிட்ட சேகரித்த பல்வேறு குறிப்புகள் அனைத்து தகவல்களும் முதல் அமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டது. விசாரணைக்கு தனி குழு அமைக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தால் மற்ற 3000 மாணவர்கள் பாதிப்படையாத நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், நேற்று ஆய்வு முடியும் போது கூட சக மாணவர்களின் பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் பள்ளியை விரைவாக தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்ற வரும் சமயத்திலும் மாவட்ட கல்வி அலுவலரின் தலைமையில் மீண்டும் இந்த பள்ளியை நடத்த மாணவர்கள் நலன் கருதி என்ன செய்யலாம் என ஒரு வாரத்திற்குள் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து 24 மணி நேரத்தில் மாணவி மரணத்திற்கான விளக்கம் கேட்டு பெறப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்சியர் விசாரணையை கண்காணிப்பார்.
இந்த விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய என்னவில்லை. பெற்றோர் என்னம் போல நாங்களும் நீதி வேண்டும் என தான் தீவிர
விசாரணை நடத்தி வருகிறோம். மாணவி மரணத்திற்கு யார் காரனமக இருந்தாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி வளாகத்தில் மாணவியின் உருவ பொம்மையை வைத்து சிபிசிஐடியினர் ஆய்வு!