ETV Bharat / state

Agriculture Loan: தடையின்றி பயிர் கடன் வழங்க நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு! - தமிழக அரசு

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுப்படிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அனைத்து விவசாயிகளுக்கும் தகுதிக்கு ஏற்ப தங்கு தடையின்றி கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பயிர்க் கடன்
பயிர்க் கடன்
author img

By

Published : Jun 20, 2023, 10:25 PM IST

சென்னை: தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள தகவலில், குறுகிய மற்றும் மத்திய கால கடனமைப்பில், மாநில அளவில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியும், மாவட்ட அளவில் 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும், கிராம அளவில் 4,453 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்குப் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க்கடனை வழங்க கூட்டுறவு சங்கங்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. விவசாயிகள் விதைகளை வாங்கவோ, விவசாயத்திற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வளம் உள்ளிட்ட அனைத்தின் தேவைகளுக்காகவும் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக் கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கடந்த 2006-07ஆம் ஆண்டு முதல் பயிர்க்கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீதம் வட்டி இழப்பைத் தமிழக அரசு வட்டி மானியமாகக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது. 2009ஆம் ஆண்டு முதல் உரிய காலத்திற்குள் கடனை திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டிச் சுமையினை அரசே ஏற்றுக்கொள்ளும் என ஆணையிடப்பட்டு, விவசாயிகளுக்குத் தொடர்ந்து வட்டியில்லா பயிர்க்கடனும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், உரியத் தவணை தேதிக்குள் பயிர்க் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகள் சார்பாக 7 சதவீத வட்டியினை அரசே கூட்டுறவுச் சங்கங்களுக்குச் செலுத்தி வரும் நிலையில், கடந்த ஆண்டில் (2022-23), கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 17.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13342.30 கோடி பயிர்க் கடன் வழங்கிச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் புதிய உறுப்பினர்களாக 2.35 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,655.60 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த 15ஆம் தேதி வரை 1,37,052 விவசாயிகளுக்கு ரூ.1,102.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இதே காலத்தில் 94,749 விவசாயிகளுக்கு ரூ717.29 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டிருந்தது. நடப்பாண்டில் கடந்த 15ஆம் தேதி வரை 14,641 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அவர்களில் 1,00,986 உறுப்பினர்களுக்கு ரூ.84.09 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விட்ட நிலையில், சாகுபடி பணி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: "உயிருக்கு பாதுகாப்பு வேணும்" - திருச்சி திமுக ஒன்றிய செயலாளர் மீது பரபரப்பு புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.