ETV Bharat / state

கழிவுநீர் லாரிகள் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை... காரணம் தெரியுமா? - தாம்பரம் மாநகராட்சி

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவுநீர் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்
author img

By

Published : Jan 2, 2023, 10:51 PM IST

சென்னை: தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் மண்டல அலுவலகத்தில், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆலோசனை கூட்டத்தில் கழிவுநீர் லாரிகள், கழிவுகளை பொது இடங்களில் கொட்டிச் செல்வதாக பல்வேறு தரப்பினர் அமைச்சரிடம் குற்றச்சாட்டை முன் வைத்தனர். புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “செப்டிங் டேங்கில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் டேங்கர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு பல்வேறு நீர் நிலைகளில் ஆங்காங்கே சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையிலே கொட்டப்பட்டு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதிக்கப்படும் வகையில் கழிவு நீர் எடுத்துச் செல்லும் லாரிகளைப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஜிபிஎஸ் கருவி பொருத்தி முறையாக கழிவுகளை கொட்டப்படாத லாரிகள் முறைப்படுத்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் சுத்தகரிப்பு தேவையான அளவில் இருக்கிறதா என கண்காணிப்பதற்கு இரண்டு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒரு பறக்கும் படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

டேங்கர் லாரிக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும். புகார் வரும் இடங்களில் இருந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் டேங்கர் லாரி உரிமம் ரத்து செய்யப்படும்.

தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் நீர் நிலைகளில் கலக்கிறதா என்பதை துறையின் அதிகாரிகள் கண்காணித்து அப்படி கலந்து இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

இதையும் படிங்க: உதயநிதி குறித்த கேள்விக்கு கோபப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.