புழல் சிறை பெண் காவலர் பணி நீக்கம்: சென்னையை அடுத்த புழலில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இதில் பெண்கள் தனிச் சிறையில் பணியாற்றி வந்த காவலர் எழிலரசி, சிறை நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொடுங்கையூரைச் சேர்ந்த ரவுடியும், கஞ்சா வியாபாரியுமான தாரணி என்பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் கஞ்சா வியாபாரி தாரணி மற்றும் அவரை சந்திக்க வரும் அவரின் உறவினர்களுடன், காவலர் எழிலரசி தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, காவலர் எழிலரசி பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மதுபோதையில் ஆம்புலன்ஸ் ஓட்டிய காவலர் சஸ்பெண்ட்: வேளச்சேரியில் மதுபோதையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிய புழல் சிறைக் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். மது போதையில் காவலர் ஹரிஹரன் ஓட்டிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம், ரெட்டேரியில் கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தை தொடர்ந்து மாதவரம் போலீசார் நடத்திய விசாரணையில், காவலர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. அதையடுத்து, பொறுப்பில் இருக்கும் அதிகாரியின் இத்தகைய செயலைக் கண்டிக்கும் விதமாக, புழல் சிறைக் காவலர் ஹரிஹரன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ஸ்மார்ட் போன் வாங்க பணம் கொடுக்காதால் மகன் வெறிச்செயல் - நடந்தது என்ன?