ETV Bharat / state

'ஆட்சி மாற்றம் நடந்தவுடன் ஊழல் புகார் மீது நடவடிக்கை பாயும்' - ஆர்.எஸ். பாரதி - r s bharathi

ஆட்சி மாற்றம் நடந்தவுடன் ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது, திமுக பழிவாங்குகிறது எனக் கூறமுடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

corruption complaint governor rs bharathi
'ஆட்சி மாற்றம் நடந்தவுடன் ஊழல் புகார் மீது நடவடிக்கை பாயும்'- ஆர்.எஸ். பாரதி
author img

By

Published : Dec 22, 2020, 3:49 PM IST

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மீதான 97 பக்க ஊழல் குற்றச்சாட்டு புகார் மனுவை இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் திமுக கொடுத்தது. இதைத்தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் கூட்டாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது ஆர்.எஸ்.பாரதி, "ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் புகார் மனுக்களை கொடுத்துள்ளார்.

இதற்கு முன்னர் ஆதாரங்களுடன் ஊழல் குற்றச்சாட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழியில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். 1995ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மீது கருணாநிதி ஊழல் புகார்களை ஆளுநரிடம் அளித்தார். அந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

'ஆட்சி மாற்றம் நடந்தவுடன் ஊழல் புகார் மீது நடவடிக்கை பாயும்'- ஆர்.எஸ். பாரதி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சொத்துக் குவிப்பு போன்ற ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னோம். கரோனா காலத்தில் மத்திய அரசு வழங்கிய தொகுப்பு அரிசியை வெளிச்சந்தையில் விற்று ஊழல் செய்ததைக் கேட்டு ஆளுநர் அதிர்ச்சியடைந்தார். ஆளுநருக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அப்போது, திமுக பழிவாங்குகிறது என கூறக்கூடாது. ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது பிரியம் உள்ளது. பலவற்றை நாங்கள் பேசினோம். அதை வெளியே சொல்ல முடியாது" என்றார்.

இதையும் படிங்க: அதிமுக ஊழல் குற்றச்சாட்டுகளின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.