சென்னை : விரல் ரேகை தேய்மானம் அல்லது விற்பனை இயந்திரத்தில் இணைய இணைப்பில் தொழில் நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்படாமல் தொடர்ந்து ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும், துணை ஆணையருக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
- தெளிவின்மையால் விரல்ரேகை பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் உடனே ரேஷன் பொருள்களை வழங்க வேண்டும்
- தொழில் நுட்பக்கோளாறால் ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் பிற வழிமுறைப்படி ரேஷன் பொருள்களைத் தர வேண்டும்
- ரேஷன் கடைகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
- முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வந்தால், உடனடியாக அவர்களுக்கு பொருட்களை வழங்க வேண்டும்
- கடைக்கு வருவோரிடம் கனிவுடன் நடந்து கொள்வதுடன், அவர்களின் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து விரல் ரேகையை சரிபார்க்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் சந்தேகம் இருப்பின் ஆணையாளர் கவனத்திற்கு கொண்டுவரலாம், அதுவரை அவ்வாறான சந்தேகத்தின் பலனை முதியோர், மாற்றுத்திறனாளிகள் நன்மை கருதி செயல்படுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.