ETV Bharat / state

’தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை’ - மகேஷ்குமார் அகர்வால் - Commissioner of Police Mahesh Kumar Agarwal

சென்னை: அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Action against rumors about vaccination said commissioner Mahesh kumar Agarwal

author img

By

Published : Apr 19, 2021, 2:54 PM IST

சென்னை, புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குள்பட்ட செம்பியம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமை, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், ”சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் அனைவரும் முகக்கவசங்களை அணிவதோடு, தகுந்த இடைவெளியையும் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்த்து அரசு வழங்கியுள்ள நடைமுறைகளை கடைபிடித்தால், தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க முடியும்” எனக் கூறினார்.

தொடர்ந்து, “மக்களின் பாதுகப்பை உறுதி செய்ய காவல்துறையினர் அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கரோனாவால் பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது. சென்னையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 12 ஆயிரம் காவல் துறையினருக்கு தடுப்பூசிகளை செலுத்த ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கின்போது காவல் துறையினர் சார்பில் சென்னையில் 200 இடங்களில் வாகன சோதனைச்சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், ”தடுப்பூசி குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் மன்சூர் அலிகான் மீது பெறப்பட்ட புகார்கள், சட்ட நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது 12 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு புதிதாக வழங்கியுள்ள உத்தரவிற்கேற்ப காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை

இரவு நேர ஊரடங்கின்போதும், முழு ஊரடங்கின் போதும் சென்னையில் 200 இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ அவசரத்திற்காக வாகனங்கள் இயங்கும் பட்சத்தில் சோதனைக்குப்பின் அனுமதி வழங்கப்படும். முழு ஊரடங்கிற்கு முதல் நாள், பொதுமக்கள் இறைச்சிக் கடைகள், மீன் சந்தைகள், காய்கறிக் கடைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு கூடுதல் ஆணையாளர் செந்தில் குமார், மேற்கு மண்டல இணை ஆணையாளர் இராஜேஷ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.