ETV Bharat / state

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து! மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக வழக்குப்பதிவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 9:53 PM IST

சென்னை: பிரபல நடிகரான மன்சூர் அலிகான் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் லியோ படத்தில் நடிகை த்ரிஷாவுடன் நடித்தது குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டிருந்தார். இதனையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, இன்று (நவ. 24) நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்த போது, மன்சூர் அலிகான் தரப்பில், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை எனவும், இதுதொடர்பாக நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

காவல்துறை சார்பில், மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி வழக்கு ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்தில் முறைகேடா? சுகாதாரத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.