ETV Bharat / state

2ஆவது மனைவியின் மகளைத் திருமணம் செய்தவர் கைது! - chennai crime news

சென்னை: பல்லாவரம் அருகே இரண்டாவது மனைவியின் மகளைத் திருமணம் முடித்த நபரை சங்கர் நகர் காவல் துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

accused arrested for marrying second wife's daughter
இரண்டாவது மனைவியின் மகளை திருமணம் செய்த நபர் கைது
author img

By

Published : Mar 21, 2020, 11:34 AM IST

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், ஞானமணி நகரைச் சேரந்த கண்ணன் (48) மஞ்சுளா தம்பதிக்கு 19, 12 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். கட்டடத்தொழிலாளியான கண்ணனுக்கு உடன் பணிபுரிந்த யுவராணி (45) என்பவருடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து யுவராணியைத் திருமணம் முடித்து அவருடன் வசித்துவந்த கண்ணன், யுவராணியின் மகள் கல்பனாவை (19) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் முதல் மனைவிக்கு தெரிந்ததும், அது குறித்து கண்ணனிடம் கேட்டுள்ளார். அப்போது, உன்னையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவதாகக் கண்ணன் மஞ்சுளாவை மிரட்டியுள்ளார்.

இரண்டாவது மகளைத் திருமணம்செய்த கண்ணன் கைது

இதில், மன உளைச்சல் அடைந்த மஞ்சுளா தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்துவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதன்பின்னர் கண்ணணின் மகள் ஜீவா கொடுத்த புகாரின்பேரில் சங்கர் நகர் காவல் துறையினர் கண்ணன் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆபாசமாகப் பேசுவது, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: செல்பியுடன் தங்களது வாழ்கையை முடித்து கொண்ட காதல் ஜோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.