ETV Bharat / state

'இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படியே அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது' - OPS

இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படியே அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

சத்திய பிரதா சாகு
சத்திய பிரதா சாகு
author img

By

Published : Jan 1, 2023, 5:37 PM IST

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான யுத்தத்தில் ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மோதிக் கொண்டு வருகின்றனர். ஜி20 மாநாடு ஆலோசனைக் கூட்டம் மற்றும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிடப்பட்டு அழைப்பு சென்றிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநிலத் தேர்தல் ஆணையம் ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அழைப்பு விடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு சட்ட ரீதியாக ஆதரவாக வந்து கொண்டிருந்த நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதம்,அவரது ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு வந்த மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்க மறுத்தது. "அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை" என மாநிலத் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு திருப்பி அனுப்பியது. இந்த நிலையில் இது தொடர்பாக மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

அதில்,"ரிமோட் வாக்குப்பதிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தோம். ஆனால், அந்த கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டது என்பது மாநிலத் தேர்தல் ஆணையத்தின் முடிவு அல்ல. இந்தியத் தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின்படியே அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது" என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஜூன் 2022 முதல் 18 மாத கால அகவிலைப்படி உயர்வு பறிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.