கடந்த திமுக ஆட்சியின்போது சென்னையில் 100 ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னாளில் பராமரிப்பின்றி அந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நவீன வசதிகளோடு மீண்டும் ஏசி பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அந்தப் பேருந்தை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆய்வுசெய்தனர் .
இந்தப் பேருந்தில் அவசர வழி, ஓட்டுநர் இருக்கை அருகே மைக் ஸ்பீக்கர், முதலுதவிப் பெட்டி, அகலமான சீட் இடைவெளி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. முதல்கட்டமாக ஐம்பது பேருந்துகளை இயக்க போக்குவரத் துறை முடிவுசெய்துள்ளது.
ஏசி பேருந்துகள் 48 லட்சம் ரூபாய், சாதாரண பேருந்துகள் 35 லட்ச ரூபாய் மதிப்பு கொண்டவை எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் புத்தகக் காட்சியை தொடங்கிவைத்த முதலமைச்சர்