ETV Bharat / state

தலைமறைவான குற்றவாளிகள் சென்னை விமான நிலையத்தில் கைது! - பாஸ்போா்ட்

பாலியல் வழக்கில் ஒன்றரை ஆண்டுகளாகக் கேரளா போலீசாரால் தேடப்பட்டு வந்த தலைமறைவான குற்றவாளி, துபாயிலிருந்து விமானத்தில் வந்தபோது, சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டது.

தலைமறைவான குற்றவாதலைமறைவான குற்றவாளிகள் சென்னை விமான நிலையத்தில் கைதுளிகள் சென்னை விமான நிலையத்தில் கைது!
தலைமறைவான குற்றவாளிகள் சென்னை விமான நிலையத்தில் கைது
author img

By

Published : Oct 16, 2022, 11:01 PM IST

சென்னை: கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் ஜோபின் ஜோஸ் (27). இவர் மீது ஆலப்புழா காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம், மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து போலீசார் இவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்காகத் தேடினர். ஆனால் ஜோபின் ஜோஸ் வெளிநாட்டுக்குத் தப்பியோடி தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஜோபின் ஜோஸ்சை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி. போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று துபாயிலிருந்து ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்து, பயணிகளை அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

இந்த விமானத்தில், பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்த கேரள வாலிபர் ஜோபின் ஜோசும் வந்தார். அவருடைய பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தனர்.அதையடுத்து ஜோபின் ஜோஸ்சை வெளியில் விடாமல் மடக்கிப் பிடித்து, குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்தனர்.

அதோடு கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அதன் பின்பு கேரளாவிலிருந்து தனிப்படை போலீசார், ஜோபின் ஜோசை கைது செய்து கேரளா அழைத்துச் செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சென்னை விமான நிலையம் குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (34) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் ஆய்வு செய்தனா். அவர் ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டால் கடந்த 8 ஆண்டுகளாக, தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

இவர் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு திருப்புலானி காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் வெளிநாட்டிற்குத் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். தற்போது இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார்.

இதையடுத்து செல்வகுமாரைப் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டுக்கும் தகவல் கொடுத்தனா். அதனையடுத்து தனிப்படை போலீசாா் சென்னை விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து, பாலியல், பலாத்காரம் மற்றும் கொள்ளை வழக்குகளில் தலைமறைவாக இருந்த கேரளா, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2 நபர்கள் தேடப்படும் குற்றவாளிகள், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:யானை தந்தம் கடத்திய ஏழு கேரள மாநிலத்தவர்கள் கைது!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.