ETV Bharat / state

சென்னையில் டிரான்ஸ்பார்மரில் இருந்து 2.195 கிலோ தங்கம் பறிமுதல் - transformer of Chennai airport

சென்னை விமான நிலையத்தின் டிரான்ஸ்பார்மரில் இருந்து 2.195 கிலோ தங்கப்பசை உள்பட மொத்தம் 5.935 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தின் டிரான்ஸ்பார்மரில் இருந்து 2.195 கிலோ தங்கம் பறிமுதல்

author img

By

Published : Oct 23, 2022, 7:26 AM IST

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு, மும்பையில் இருந்து வரும் விமான பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை தனிப்படையினர், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மும்பையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதில் வந்த மும்பையைச் சேர்ந்த மூன்று பயணிகள் ஒரு குழுவாக வந்தனர். இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.

தொடர்ந்து அவர்களின் கைப்பைகளை சோதனை செய்தபோது, அதனுள் 13 பார்சல்களும், அந்த பார்சலுக்குள் தங்க பசை மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், மூன்று பேரில் ஒருவரின் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க கட்டியையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு இந்த மூன்று மும்பை பயணிகளிடமிருந்து மொத்தம் ரூ.1.63 கோடி மதிப்புடைய 3.74 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மும்பை பயணிகள் மூன்று பேரும் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் வருகை பகுதியில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் விமான நிலைய ஊழியர்கள் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது கன்வேயர் பெல்ட் 5 அருகே சுத்தப்படுத்தும்போது, அங்கிருந்த மின்சார ட்ரான்ஸ்பார்மர் மூடி திறந்திருந்துள்ளது. இதனை ஊழியர்கள் சரிசெய்ய முற்பட்டபோது, அதனுள் ஒரு பார்சலை பார்த்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து சுங்கத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சுங்கத்துறையினர், அந்த மர்ம பார்சலை எடுத்து பிரித்துப் பார்த்துள்ளனர்.

அதனுள் ரூ.96.09 லட்சம் மதிப்புள்ள 2.195 கிலோ தங்கப் பசை இருந்துள்ளது. இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் சுங்கத்துறையினர், பார்சலை வைத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இவ்வாறு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில், ரூ.2.60 கோடி மதிப்புடைய 5.935 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிடுகிடுவென உயர்ந்த விமான டிக்கெட்.. குறையாத விமான பயணிகள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.