சாதனையில் எத்தனை ரகம். நாம் அன்றாட வாழ்க்கையில் விளையாட்டாக செய்வதுகூட சாதனை புத்தகத்தில் இடம்பெறலாம். அந்த வகையில், சென்னை மாணவர் ஸ்டேப்ளர் பின்கள் பயன்படுத்தி, கின்னஸ் புத்தக்ததில் இல்லாதப் புதிய சாதனையை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
சென்னை சூரப்பட்டு பகுதியில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ், கனவுகள் கலாம் தொண்டு நிறுவனம் இணைந்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி மாணவர் சிரஞ்சீவி புதிய சாதனை ஒன்றை படைத்து அசத்தினார். அவர், 51 ஆயிரத்து 620 ஸ்டேப்ளர் பின்களால் உருவாக்கப்பட்ட 580 மீட்டர் நீளம் கொண்ட சங்கிலியை பயன்படுத்தி அப்துல் கலாமின் உருவப்படத்தை தத்ரூபமாக வடிவமைத்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இதற்கு முன்பு, சந்திப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அனுபம் சர்க்கார் என்பவர் 554.54 மீட்டர் நீளம் கொண்ட சங்கிலியை ஸ்டேப்ளர் பின்களை பயன்படுத்தி தயாரித்ததே சாதனையாக இருந்தது.
சிரஞ்சீவியின் இந்த சாதனையை யூனிகோ வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழையும் வழங்கியது. மேலும் அவரது சாதனையை பாராட்டி என்பிஎஸ் என்ற தொண்டு நிறுவனம் ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையை அன்பளிப்பாக வழங்கியது.
இதையும் படிங்க: இறந்தவர்களின் சாம்பலை சேமிக்கும் உலகின் ஒரே வங்கி!