சென்னை: அப்போது பேசிய அவர், "இன்று (ஜூலை. 26) சிலை கடத்தல் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் செல்வா என்ற எக்ஸ்போர்ட் நிறுவனம் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள், புராதன பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காக பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது.
கைப்பற்றப்பட்ட சிலைகள்:
இதனையடுத்து அந்த விலாசத்தில் சோதனை நடத்தியபோது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு உலோக அம்மன் சிலை, இரண்டு அம்மன் சிலைகள், ஒரு கிருஷ்ணர் ஓவியம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைப்பற்றப்பட்ட பொருள்கள் புராதன சிலைகள் என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை இந்திய தூதரகம் மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள்:
தென்காசி மாவட்டம் கடையம் பகுதிக்குட்பட்ட காணாமல்போன ஐந்து சிலைகள் தேடப்பட்டு வந்த நிலையில் அவை அமெரிக்காவில் இந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த சிலைகளை தமிழ்நாடு கொண்டுவர கடத்தல் தடுப்புப் பிரிவினர் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.
தஞ்சாவூர் சிலைகள்:
தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நரசிம்மர், கிருஷ்ணா, கணேஷ், சம்பந்தர், சுந்தரர், விஷ்ணு ஆகிய ஆறு சிலைகள் காணாமல்போன வழக்கு ஏற்கனவே பதியப்பட்டிருந்தது. அவற்றையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்பொழுது கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகள் வரை 17க்கும் மேற்பட்ட வழக்குகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் பதிவு செய்யப்பட்டு 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்து ஊக்கத் தொகை வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் அவர்களுக்கு அபய் குமார் சிங் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
இதையும் படிங்க: ISRO spy case: 2 முன்னாள் காவல் துறையினருக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால பிணை