ETV Bharat / state

ஆவின் நெய், வெண்ணெய் விலை ஏற்றம் - ஆவின் தரப்பு விளக்கம் என்ன? - பால்பொருட்கள் விற்பனை

Aavin Ghee and Butter Price hike: ஆவின் பால் மற்றும் வெண்ணெய்யின் திடீர் விலையேற்றத்தைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரும் தங்கள் எதிர்ப்பு மற்றும் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில், ஆவின் தரப்பில் இருந்து விலை ஏற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் திடீர் விலை ஏற்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 5:06 PM IST

சென்னை: ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமன்றி, 225-க்கும் மேற்பட்ட பால்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் தயாராகும் மோர், லெஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். எனவே ஆவின் நிர்வாகம் பால், நெய், வெண்ணெய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பல்வேறு உணவுப் பொருள்களை விற்பனை செய்து வருகிறது.

ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் திடீர் விலை ஏற்றம்
ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் திடீர் விலை ஏற்றம்

இருப்பினும், ஆவினின் முக்கியப் பொருளாக விற்பனையாவது பால் மற்றும் நெய்தான். இந்த நிலையில், நேற்று முதல் (செப்.14) ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 15 மில்லி நெய் பாக்கெட் ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு ரூபாய் உயர்த்தி ரூ.15-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து, 100 மில்லி பாக்கெட் ரூ.70-ல் இருந்து ரூ.80-ஆகவும், 500 மில்லி லிட்டர் பாட்டில் ரூ.315-ல் இருந்து ரூ.365-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆவின் நெய் லிட்டர் பாக்கெட் ரூ.620-ல் இருந்து ரூ.690-ஆகவும், ஜார் ரூ.630-ல் இருந்து ரூ.700-ஆகவும் ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், வெண்ணெய் 100 கிராம் ரூ.55-ல் இருந்து 60-ஆகவும், சமையல் வெண்ணெய் 500 கிராம் ரூ.260-ல் இருந்து 275-ஆகவும், உப்பு வெண்ணெய் 500 கிராம் ரூ.275- ல் இருந்து, ரூ.280 என ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் சார்பில் அனுப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் மற்றும் கண்டங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆவின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?: இது தொடர்பாக ஆவின் தரப்பில் “ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகள் மிகுந்த தரத்துடன், குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, அதன் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், பண்டிகை காலங்களில் பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மாவட்ட ஒன்றியங்களில் உள்ள ஆலைகளின் திறன் மேம்படுத்தப்பட்டு, நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஆவின் நெய்யின் தற்போது உள்ள ஆயுட்காலத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்திய அளவில் பால் மூலப்பொருட்களின் கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்தவாறு இருப்பதாலும் மற்றும் உற்பத்திச் செலவும் அதிகரித்த காரணத்தினால் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை உயர்வு நேற்று முதல் (செப்.14) அமல்படுத்த இந்நிறுவனத்திற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலையை விட ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் வகைகளின் விலை மிகவும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தரமான ஆவின் பால் உபபொருட்களைப் பயன்படுத்தி சுமார் 4.5 லட்சம் தமிழக பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தருமபுரியில் 16 ஆண்டுகள் ஓடாத தேர்; சீரமைக்கும் பணியைத் துவங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.