ETV Bharat / state

மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும் பால் பாக்கெட்...ஆவின் அறிமுகம்...! - ஆவின் டிலைட்

பசும்பாலை மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ’ஆவின் டிலைட்’ எனும் புதிய பால் பாக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆவினில் மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும் பால் பாக்கெட் அறிமுகம்

author img

By

Published : Nov 2, 2022, 1:26 PM IST

சென்னை: பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க "ஆவின் டிலைட்" எனும் பசும்பால் புதிய வடிவத்தில் 500 மில்லி பாக்கெட்டுகளில் தயார் செய்து அதிகபட்ச சில்லறை விலை ரூ.30 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆவின் டிலைட் பசும்பால் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆவின் டிலைட் 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் (SNF) கொண்ட இப்பாலை, 90 நாட்கள் வரை எவ்வித குளிர்சாதன வசதியின்றி வைத்து பயன்படுத்தலாம். மேலும் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயனங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக்காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைத்திட ஆவின் டிலைட் மிகப்பெரிய பங்காற்றும் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க: பயன்பாட்டு குளத்தில் கலக்கும் ஆலைக்கழிவுகள்.. தூத்துக்குடி கிராம மக்கள் வேதனை..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.