ETV Bharat / state

தாயை தகாத வார்த்தையில் திட்டிய தாய்மாமனை கருங்கல்லால் குத்திக் கொலை செய்த மகன்! - chennai crime news

சென்னை: ஆலந்தூர் பகுதியில் தாயை தகாத வார்த்தையில் திட்டிய தாய்மாமனை கருங்கல்லால் முகத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்த மகனை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

தாய்மாமனை கருங்கல்லால் முகத்தில் குத்தி கொலை செய்த மகன்
author img

By

Published : Nov 20, 2019, 4:33 PM IST

சென்னை ஆலந்தூர், ஆசர்கானா தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகன் கோகுல்ராஜ் (31), தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ் (60) என்பவர் நேற்றிரவு 12 மணியளவில், குடித்துவிட்டு சரஸ்வதியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.

இதேபோல், தொடர்ந்து குடித்துவிட்டு வந்து திட்டும் தாய்மாமனின் செயலைக் கண்டு கோபமடைந்த கோகுல்ராஜ், அவரை வீட்டிலிருந்து விரட்டியுள்ளார். அப்போதும் அங்கிருந்து போகாமல் திட்டிக் கொண்டிருந்ததால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான கோகுல்ராஜ், கீழே கிடந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து எத்திராஜ் முகத்தில் குத்திக் கொடூரமாக தாக்கியுள்ளார்.

தாய்மாமனை கருங்கல்லால் முகத்தில் குத்தி கொலை செய்த மகன்

இதில், நிகழ்விடத்திலேயே எத்திராஜ் உயிரிழந்தார். பின்னர், தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற பரங்கிமலை காவல்துறையினர் எத்திராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய்மாமனை கொலை செய்த கோகுல்ராஜை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுத்து தன்பால் சேர்க்கையில் ஈடுபட்ட கடைக்காரர் கைது!

Intro:தாயை ஆபாசமாக திட்டியதால் தாய்மாமனை கருங்கல்லால் குத்தி கொடூரமாக கொன்ற மகன் கைதுBody:தாயை ஆபாசமாக திட்டியதால் தாய்மாமனை கருங்கல்லால் குத்தி கொடூரமாக கொன்ற மகன் கைது

சென்னை ஆலந்தூர், ஆசர்கானா தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி இவரது மகன் கோகுல்ராஜ்(31) தனியார் கொரியர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ்(எ) அப்புன்(60)

நேற்றிரவு 12 மணியளவில் எத்திராஜ் குடித்துவிட்டு சரஸ்வதியை ஆபாசமாக பேசி திட்டியுள்ளார். தொடர்ந்து குடித்துவிட்டு வந்து திட்டி வருவதை கண்ட கோகுல்ராஜ் தனது தாயையே திட்டுகிறாயே என்ற ஆத்திரத்தில் அவரை வீட்டிலிருந்து விரட்டினார்.

வீட்டிலிருந்து வெளியில் வந்தவர் போகாமல் திட்டிக் கொண்டிருந்ததால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான கோகுல்ராஜ் கீழே இருந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து எத்திராஜ் முகத்தில் சதக் சதக் என குத்திக் கொடூரமாக தாக்கினார். இதில் நிகழ்விடத்திலேயே எத்திராஜ் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார்.

பின்னர் பரங்கிமலை போலீசார் தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாய்மாமனை கொலை செய்த கோகுல்ராஜை பரங்கிமலை போலீசார் கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.