சென்னை அடுத்துள்ள திருவொற்றியூரை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் யோகேஸ்வரன். இந்நிலையில் இவர் போட்டோஷூட்டுக்காக தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது காசி மேடு சூரியநாராயணன் சாலையில் உள்ள பாரத் பெட்ரோல் பங்க் அருகே சென்ற பொழுது வாகனத்தின் இன்ஜின் அருகே லேசாக தீ பற்றி எரிந்தது.
இதையறிந்த யோகேஸ்வரன், வண்டியை உடனடியாக நிறுத்தினார். இதனால் அவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அருகிலிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் சற்றும் தயங்காமல் தீயணைப்பானை பயன்படுத்தி ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் இரண்டு பெட்ரோல் பங்க் இடையில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.