ETV Bharat / state

Zomato டெலிவரி ஊழியர்கள் நூதன மோசடி - நடவடிக்கை பாயுமா?

சொமேட்டோ ஆர்டர் செய்யும் பொருட்களை வாடிக்கையாளர்கள் உடந்தையோடு டெலிவரி ஊழியர்கள் நூதன முறையில் மோசடி செய்வதாக டிவிட்டரில் இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 23, 2023, 9:47 PM IST

சென்னை: இந்தியா முழுவதும் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy), சொமேட்டோ (Zomato), டன்சோ (Dunzo) உட்பட பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை உணவு டெலிவரி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட வீட்டிற்குth தேவையான பொருட்கள் அனைத்தையும் டெலிவரி செய்யும் சேவை செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் டெலிவரி ஊழியர்கள் தற்போது நூதன முறையில் மோசடி செய்வதாக வாடிக்கையாளர் வினய் என்பவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சொமெட்டோ தலைமைச் செயல் அதிகாரிகளை டேக் செய்து புகாரளித்துள்ளார்.

அதில், சொமேட்டோவில் 800 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்யும்போது, அதற்கு கேஷ் ஆன் டெலிவரி என்ற வசதியை பயன்படுத்தி ஆர்டர் செய்யுமாறு கூறுவதாகத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இந்த முறையில் டெலிவரி ஆர்டர் செய்தால், டெலிவரி ஊழியரோ அல்லது வாடிக்கையாளரும் காரணங்கள் சிலவற்றைக் கூறி ஆர்டரை கேன்சல் செய்து, கேன்சல் செய்யப்பட்ட உணவு அல்லது பொருட்களைப் பாதி விலைக்கு டெலிவரி ஊழியர் விற்பனை செய்து விட்டு போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் டெலிவரி நிறுவனத்திற்கு மட்டுமே நஷ்டம் ஏற்படும் எனவும் டெலிவரி ஊழியருக்கும், வாடிக்கையாளருக்கும் லாபம் ஏற்படும் வகையில் இந்த மோசடி நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து டெலிவரி ஊழியர்கள் சிலரிடம் விசாரித்த போது, சுமார் 500 ரூபாய்க்கு மேல் உணவு அல்லது மளிகை பொருட்கள் ஆர்டர் செய்வார்கள் எனவும் அவர்கள் தெரிவித்த முகவரிக்கு முன்பாகவே சென்று, வாடிக்கையாளரின் எண்ணை வேறொரு எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு டீல் பேசுவதாகவும் டெலிவரி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Zomato Scam
Zomato Delivery boy Scam

குறிப்பாக நீங்கள் ஆர்டர் செய்த பணத்தைவிட பாதி அளவு அல்லது அதற்குக் குறைவாகவும் தங்களுக்குக் கொடுத்தால் ஆர்டர் செய்த பொருட்களையும் கொடுத்துவிட்டு சென்று விடுவோம். உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என வாடிக்கையாளரையே தங்கள் மோசடிக்கு உடந்தையாக்கி பணத்தை மோசடி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கேன்சல் ஆனாலும் ஆர்டர் செய்யப்பட்ட பொருளின் மதிப்பை டெலிவரி ஊழியர்கள் சம்பளத்திலிருந்து பிடிக்க மாட்டார்கள் எனவும் மேலும் டெலிவரி ஊழியர்களுக்கு போட வேண்டிய கமிஷன் தொகையும் தவறாமல் கொடுத்து விடுவார்கள் என்றும் தெரிவிக்கின்றனர்.

சில நேரங்களில் டெலிவரி ஊழியர்களே உணவு அல்லது பொருட்களை ஆர்டர் செய்து, எந்த ஹோட்டலில் ஆர்டர் செய்கிறார்களோ அதன் அருகே இந்த மோசடியில் உடந்தையாக இருக்கும் டெலிவர் ஊழியரை நிற்க வைத்து, அந்த ஆர்டர் தங்களது கூட்டாளி நண்பருக்கு டெலிவரி ஆர்டர் கிடைக்கும் வகையில் செய்து, அதன் பின் ஆர்டரை கேன்சல் செய்வது மூலம் மோசடி செய்வதாகவும் சில நியாயமான டெலிவரி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஆர்டர் செய்யும் உணவு அல்லது பொருட்களை டெலிவரி செய்யும் போது , சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் போனை எடுக்காமலேயோ அல்லது சரியான முகவரி கொடுக்காததால் டெலிவரி ஊழியர்கள் ஆர்டர் செய்த உணவு அல்லது பொருட்களை கொடுக்க முடியாத சூழல் ஏற்படும்.

Zomato Scam
Zomato Scam

சம்பந்தப்பட்ட டெலிவரி ஊழியர் அவர்கள் நிறுவனத்தின் உதவி மையத்தை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர் அழைப்பை ஏற்கவில்லை எனவும் சரியான முகவரி கொடுக்கவில்லை எனவும் இதனால் உணவு அல்லது பொருட்களை டெலிவரி செய்ய முடியவில்லை என்று தெரிவித்துவிடுகிறார்.

உதவி மையம் மூலமாகவும் வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள முடியாவிட்டால் ஆர்டர் செய்த உணவு அல்லது பொருட்களை எடுத்து வந்த டெலிவரி ஊழியர்களே எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதி உள்ளது. இதை சில டெலிவரி ஊழியர்கள் தவறாகப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் உடனேயோ அல்லது தங்கள் நண்பர்களையே ஆர்டர் செய்ய வைத்தோ மோசடி செய்வதாகத் தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமல்லாது சில வாடிக்கையாளர்கள், நன்றாக கொண்டு வந்த உணவு அல்லது மளிகை பொருட்களை, தாங்களாகவே பாதிப்பு ஏற்படுத்தி அதை புகைப்படம் மூலம் டெலிவரி நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திற்கு புகார் தெரிவித்து, ஆர்டர் செய்த பொருளுக்கான பணத்தை ஏமாற்றி திரும்பி பெறும் மோசடியும் அதிகம் நடைபெறுவதாக டெலிவரி நிறுவன தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும், சிறப்பான சேவை அளித்து நம்பிக்கை பெறுவதற்கு, இதுபோன்று வசதிகள் டெலிவரி நிறுவனம் செய்து வைத்திருப்பதாகவும், ஆனால் அதையே சில வாடிக்கையாளர்கள் தவறாக பயன்படுத்தி மோசடி செய்வது நிகழ்வதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'ஹவ் டூ பிரிங் பேக் எக்ஸ்' நூதன முறையில் இளம்பெண் ஏமாற்றம்.. பஞ்சாப் இளைஞர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.