சென்னை: தாம்பரம் அடுத்த மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர், ஷீலா ஜெபமணி (51). தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 16ஆம் தேதி தன்னுடன் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ரமா பிரபாவிற்கு குரோம்பேட்டை அருகே விபத்து ஏற்பட்டதாக ஷீலா ஜெபமணிக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
உதவி ஆய்வாளருக்கு உதவி செய்வதற்காக ஷீலா ஜெபமணி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது குரோம்பேட்டை அருகே பின்னால் அதிவேமாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இதில் ஷீலா ஜெபமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஏழு தையல்கள் போடப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அதையடுத்து இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விபத்து ஏற்படுத்திய வாகன எண்ணை வைத்து சக்தி (41) என்பவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க:மீண்டும் சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு: முதல் கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை