ETV Bharat / state

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் மிகப் பெரும் தலைவலி.. வேலையை உதறிய ஆசிரியருக்கு மீண்டும் பணி நியமனம்! - எண்ணும் எழுத்தும் திட்டம் மிகப் பெரும் தலைவலி

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் மிகப் பெரும் தலைவலியாக இருக்கிறது எனவும் மன உளைச்சல் ஏற்படும் அளவிற்கு பணிகளில் அழுத்தங்கள் தரப்படுகின்றன என புகார் தெரிவித்து, வேலையை உதறிய அரசு பள்ளி ஆசிரியர், துறை அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக மீண்டும் பணியில் சேர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 6:24 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தாெற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதுடன், பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டு, மாணவர்களுக்கான கற்பித்தல் பணியும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பள்ளி, கல்லூரிகள் சரியாக செயல்படவில்லை. தொடக்கப் பள்ளி மாணவர்கள், 1 மற்றும் 2 ஆம் வகுப்பை முடிக்காமல் நேரடியாக 3ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து மாணவர்களின் கற்றல் இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் நடத்தப்பட்டது.

'எண்ணும் எழுத்தும் திட்டம்': தமிழ்நாட்டின் தொடக்க வகுப்பறைகளில் கற்றல், கற்பித்தலின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் எண்ணும் எழுத்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், எட்டு வயதிற்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும், பொருள் புரிந்து படிக்கவும், எண்மதிப்பு அறிந்து அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது இதன் இலக்காகும்.

கரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைச் சரி செய்வதே, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும். இந்நோக்கத்தினை அடையும் வகையில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத் தலைமையின் கீழ் 2022ஆம் கல்வியாண்டிலிருந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாணவர்களுக்கு ஏற்கனவே மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்து அளிக்கப்பட்ட பாடப்புத்தகத்தை பயன்படுத்தாமல், மீண்டும் புதியதாக அச்சிட்டு வழங்கப்பட்ட பாடப்புத்தகத்தை பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் திறனை சோதிப்பதற்காக, கற்றல் அடைவுக்கான தரவுகளையும் எடுத்து அனுப்ப வேண்டும். ஆசிரியர் பயிற்சி பெறாதவர்களை கொண்டு அடைவுத் திறன் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தனி கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதோடு, வழக்கமான பாட புத்தகங்களையும் நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் குப்பண்ணன் என்பவர் அண்மையில் தனது வேலையை ராஜினாமா செய்வதாக அதிகாரிகளுக்கு கடிதம் அளித்தார். இது குறித்து குப்பண்ணன் கூறுகையில், “எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் கரோனா காலத்திற்காக தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அத்திட்டத்தை வைத்துக்கொண்டு அது தொடர்பான ஒரு பாடத்திட்டங்களையும், வழக்கமான பாடத்திட்டங்களையும் நடத்த வேண்டும் என துறை சார்பில் அழுத்தங்கள் தரப்படுகின்றன.

இதனால் பல்வேறு மன உளைச்சல்கள் ஏற்படுகிறது. இதனால், வேலையே வேண்டாம் என எழுதிக் கொடுத்த கடிதம், சமூக வலைதளங்களில் மிகப்பெரும் வைரலாக பரவியது. இந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய தொடக்க கல்வித்துறை அதிகாரிகள், மீண்டும் பணியில் சேருமாறு அழுத்தம் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் பணியில் சேர்ந்தேன்” என்றார்.

இதையும் படிங்க: "என்னை வெட்டி கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன்" - கனகராஜின் சகோதரர் தனபால் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.