ETV Bharat / state

கூவம் ஆற்றில் மூழ்கிய மாணவனின் உடல் 18 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு - Fire and Rescue Service Officer Robin

சென்னை கூவம் ஆற்றில் குளிக்க சென்று உயிரிழந்த மாணவனின் உடலை 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டுள்ளனர்.

Etv Bharatகூவம் ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் மூழ்கி உயிரிழிப்பு - உடலை மீட்ட தீயணைப்புத் துறை

author img

By

Published : Dec 19, 2022, 7:30 AM IST

சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள திடீர் நகர் பகுதியை சேர்ந்த உன்னி கிருஷ்ணன்-வனிதா தம்பதியின் 14 வயது மகன் சாமுவேல் நேற்று முன்தினம் (டிசம்பர் 17) மாலை கூவம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது சாமுவேல் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கியுள்ளார். இதுகுறித்து நண்பர்கள் அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. அதனடிப்படையில் தீயணைப்புத்துறையினருடன் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது படகு மூலம் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சுமார் 18 மணி நேரத்துக்கும் மேலாக போராடி நேற்று (டிசம்பர் 18) மாணவின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:பிகாரில் திறப்பு விழாவிற்கு முன்பே பாலம் இடிந்து விழுந்தது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.