ETV Bharat / state

N Sankaraiah:நூற்றாண்டு கண்ட தகைசால் தமிழர்....சுதந்திர போராட்ட தியாகி ...யார் இந்த சங்கரய்யா?

”வறுமையின் நிறம் சிவப்பு அல்ல வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு” என கூறிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் .

N Sankaraiah
என் சங்கரய்யா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 12:55 PM IST

சென்னை: சுதந்திரப் போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா இன்று (நவ.15) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியதாகக் காணப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பொற்று வந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் அவரின் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறை வாழ்கையும் கம்யூனிஸ்ட் சிந்தனையும்: 8 வருடம் சிறை வாழ்க்கை 5 வருடம் தலைமறைவு வாழ்க்கை என இவரது இளம் பருவம் கடந்தது. அவ்வளவு ஏன் தோல் நோய் வந்த நிலையிலும் மருத்துவரை கூட நேரில் சென்று உடல்நிலையை கவனிக்க முடியாத நிலையில் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்தவர் தான் சங்கரய்யா.

சென்னை - வறுமையின் நிறம் சிவப்பு அல்ல வறுமையை போக்க வந்த நிறமே சிவப்பு என கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான சங்கரய்யா சட்டமன்றத்தில் முழங்கிய வார்த்தைகள் இதுதான். பிரதாப சந்திரன் என்ற இயற்பெயரை கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான என்.சங்கரய்யா தூத்துக்குடி ஆத்தூரை சேர்ந்தவர்.

கம்யூனிஸ்ட் தோழர்களால் என்.எஸ்.என்று அழைக்கபட்டவர்தான் இவர், தனது தாத்தாவின் பெயரை தனக்கு சூட்ட வேண்டும் என்று வீட்டிற்குள்ளே போராட்டத்தை தொடங்கி அதில் வெற்றியை கண்டவர். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் போராட்டத்தில் கழித்த சங்கரய்யாவின் முதல் போராட்டமே இந்தி திணிப்பை எதிர்த்து தான். அதன் பின்னர் ஆங்கிலேய ஏகாதியபத்திற்கு எதிராக போராட்டம், சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்கத்தை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள்.

மாணவ பருவத்திலேயே இடதுசாரி இயக்கங்கள் மீது விருப்பம் கொண்டிருந்தார் சங்கரய்யா. 1940களில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது மாணவர் சங்கம் மூலம் ஆங்கிலேயருக்கு எதிராக கலக குரல் எழுப்பினார். அதை தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை அழைத்து வந்து மாணவர்கள் மத்தியில் விடுதலைக்கான விதையை விதைத்தார்.

அதற்கு பரிசு பெற்று பி.ஏ இறுதி தேர்வுக்கு 15 நாட்கள் முன்பாகவே சிறைவாசம். 18 மாதங்கள் சிறையின் பிடியில் இருந்து மறுபடியும் ஆங்கிலேயருக்கு எதிராக குரல் கொடுத்த போது மீண்டும் சிறையில் தள்ளப்பட்டார். அப்போது மாணவர்களால் இந்திய அளவில் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படவே அவரை விடுதலை செய்தது பிரிட்டிஷ் அரசு.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால் நான்கு ஆண்டுகள் சிறை, சுதந்திர இந்தியாவில் ஆளும்வர்க்கத்தை எதிர்த்து நின்றதால் நான்கு ஆண்டுகள் என எட்டு ஆண்டுகள் சிறைவாசம். ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்தது என போராட்ட களமாகவே தனது வாழ்நாளை நகர்த்தி சென்றவர். குறிப்பாக சலவை தொழிலாளி வீட்டில் அழுக்கு மூட்டைகளுக்கு நடுவில் மாதக்கணக்கில் பதுங்கியிருந்து அங்கிருந்தே போராட்டங்களை முன்னெடுத்த நிகழ்வுகளும் உண்டு.

அரசியல் பயணம்: 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட போது அதற்கு மூல காரணமாக இருந்த 32 பேரில் சங்கரய்யாவும் ஒருவர். 1967 மதுரை மேற்கு தொகுதி, 1977 மற்றும் 1980 மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனசக்தி இதழின் முதல் பொறுப்பாசிரியராகவும் தீக்கதிர் இதழின் முதல் ஆசிரியராகவும் இருந்தவர் இவர்.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொழுது அத்தியாவசிய பொருட்களுக்காக கிராம மக்கள் நகரங்களுக்கு செல்ல வேண்டியது இருக்கிறது. என்று கூறி அப்போதே ஆளுநர் உரையில் கிராமங்களில் நியாய விலை கடையை அமைக்க வேண்டும் என சேர்க்குமாறு சங்கரய்யா சொன்னதை அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அதனை நிறைவேற்றினார்.

குறிப்பாக என் ஒருவனுக்கு ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால் அவை அத்தனையும் சங்கரையாவுக்கே செலுத்தவேன் என சங்கரய்யா மீது பெரு மதிப்பு கொண்டிருந்தவர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது. உழைப்பாளர்களின் உற்ற தோழனாக நின்று பல போராட்டங்களை முன்னெடுத்தவர்.

சங்கரய்யா சாதி மறுப்பு திருமணம்: சங்கரய்யா பொதுவாழ்வில் ஈடுபட்ட நாள் முதல் தன் இறுதி மூச்சு வரை கம்யூனிச கொள்கை பிடிப்புடன் இருந்தவர். 2017 ஆம் ஆண்டு தனது 95 வயதிலும் ஆணவ கொலைகளுக்கு எதிரான போராட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியவர் தான் சங்கரய்யா.

சாதி மறுப்பு திருமணங்களை மேடைகள் பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தன் குடும்ப வாழ்விலும் செயல்படுத்தி காட்டியவர் தான் சங்கரய்யா அவர் தொடங்கி அவர் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வரை பலரும் சாதி மறுப்பு திருமணங்களையே செய்தவர்கள்.

தகைசால் தமிழர்: 2021 இல் திமுக ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைந்த போது தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்களை சிறப்பிக்க ’தகைசால் தமிழர் விருது’ உருவாக்கப்பட்டது. இந்த விருது முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கரய்யாவுக்கு நேரில் வழங்கினர். மேலும் காசோலை ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டது. அதனை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு திருப்பி வழங்கி பெருமை சேர்த்தவர் சங்கரய்யா தமிழக அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி இந்திய அரசியல் வரலாற்றிலும் என்றைக்கும் அழியாத இடம் உண்டு.

இதையும் படிங்க: என்.சங்கரய்யா மறைவு; அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.