சென்னை அமைந்தகரை செனாய் நகரில் உணவக கடையை நடத்திவருபவர்கள் பிரவீன் தாகா - விஜய் ரோஷன் தாகா. தற்போது சமூக வலைதளங்களில் இந்தக் கடையின் உரிமையாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாகவும், இந்தக் கடையில் பொருள்கள் வாங்க வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டாம் எனவும் செய்தி ஒன்று உலாவியது.
இந்தச் செய்தியால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனையடுத்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் பிரவீன் தாகா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
அதில், தங்கள் நிறுவனத்தின் பெயரைக் கெடுக்கும்வகையில் விஷமிகள் சிலர் பொய்யான தகவல்களைப் பரப்பிவருகின்றனர். எங்களுக்கு கரோனா தொற்று ஏற்படவில்லை.
வாடிக்கையாளர்களுக்குச் சுத்தமான உணவை தொடர்ந்து வழங்கிவருகிறோம். எனவே சமூக வலைதளங்களில் எங்கள் மீதும் எங்களது நிறுவனத்தின் மீதும் வதந்தி பரப்பிவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 646 பேருக்கு கரோனா உறுதி