புதூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் லிங்கதுரை. இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்திவருகிறார். இவரது மனைவி உமாராணி. இவர்களுக்கு அட்சயா (19) என்ற மகளும், தர்ஷன் ஆதித்யா (14) என்ற மகனும் உள்ளனர். அட்சயா பிடிஎஸ் படித்து வருகிறார். தர்ஷன் அம்பத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார். இந்நிலையில் நேற்று மாலை தர்ஷன் பள்ளிப்படிப்பு முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர், வீட்டில் உள்ள படுக்கை அறையைப் பூட்டிவிட்டு குளிக்க சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வெளியே வராததால், பெற்றோர் அறை கதவை தட்டியும் கதவை திறக்காததால், அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்குள்ள கொடி கயிற்றில் தர்ஷன் கழுத்து இறுகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
இதனையடுத்து, பெற்றோர் அவனை மீட்டு அம்பத்தூர் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் தர்ஷன் வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, அம்பத்தூர் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பள்ளி மாணவன் கொடி கயிற்றில் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் புதூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் சிறை!