வட மேற்கு வங்க கடல் பகுதியில் ஜூலை 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முன்கூட்டியே இன்று (ஜூலை 22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தெலங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, சத்தீஷ்கரில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை
"இதையடுத்து இன்று (ஜூலை 22) நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும். எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்".
"மேலும் ஜூலை 23, 24 தேதிகளில் நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
"இந்த புயலால் தமிழ்நாடு கடலோரம், மன்னார் வளைகுடா, ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்".
"மேலும் தெற்கு வங்க கடல், மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்".
இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்"என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெள்ளக்காடான சீனா- 12 பேர் உயிரிழப்பு!