ETV Bharat / state

திருவண்ணாமலையில் 30 லட்சம் பேர் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையம் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு - Tiruvannamalai new bus stand

30 லட்சம் பேர் வரை வந்து செல்லக்கூடிய திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு சட்டப் பேரவையில் பதில்

அமைச்சர் கே.என். நேரு
திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம், கட்டும் நடவடிக்கை
author img

By

Published : Mar 28, 2023, 1:55 PM IST

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வில் வினாக்கள் விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் நகரப் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு முன் வருமா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு, மதுராந்தகம் நகரப் பேருந்து 1992 ஆண்டில் கட்டப்பட்டது. 25 பேருந்துகள் நிறுத்தக்கூடிய அளவிற்குக் கட்டப்பட்டுள்ள நிலையில் 10 அரசுப் பேருந்துகள் மட்டுமே இங்கு வந்து செல்கின்றன. இதனால் தற்போது அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை இல்லை எனினும் மக்களின் வசதிக்காக அதை நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் உள்ளது. இதில் 203 பேரூராட்சிகளில் பேருந்து நிலையங்கள் உள்ளது. தற்போது கீழ்பெண்ணாத்தூரில் உள்ள பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்விக்கு அமைச்சர் நேரு பதிலளித்தார்.

தமிழகத்தில் 184 பேருந்து நிலையங்கள் மாநகராட்சி நகராட்சி பகுதியில் இருப்பதாகவும் 203 பேருந்து நிலையங்கள் பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 20 மாத கால திமுக ஆட்சியில் 117 பேருந்து நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கும்பகோணம் கோயில் நகரமாக இருப்பதால் அதிகப்படியான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் வணிகர்கள் நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு அரசு முன்வருமா எனக் கேள்வி எழுப்பினர்.

கோவில் நகரமான கும்பகோணம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக இடம் தேர்வு செய்து தந்தால், இந்த ஆண்டு பேருந்து நிலையம் அமைக்க இந்த ஆண்டே அரசு முன்னுரிமை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

திருவண்ணாமலைக்கு ஒவ்வொரு நாளும் 30 லட்சம் பேர் வரை வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே அங்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார். வால்பாறை பகுதியிலுள்ள மாசாணி அம்மன் திருக்கோயிலில் நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் கட்டுவதற்குத் திட்ட அறிக்கை தயார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: Edappadi Palaniswami: அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி.. ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.