சென்னை அடையாறில் வசித்து வருபவர் ராஜா(43). இவர், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனை, அந்தச் சிறுமி அழுதபடியே தனது தாயிடம் கூறியுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுதொடர்பாக அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதைத் தொடர்ந்து, ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கடத்தப்பட்ட சிறுவனுக்குப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை