ETV Bharat / state

’98இல் திமுக அரசால் ஏமாற்றப்பட்டேன்.., இன்று வரை பலனில்லை..!’- சாமானியர் ஆதங்கம் - திமுக அரசிற்கு எதிராக அடையாளப் போராட்டம்

சமத்துவபுரத்திற்கு நிலம் வழங்கினால் வீடு மற்றும் வேலை தருவதாகக் கூறி அரசு அலுவலர்கள் மோசடி செய்ததாக ஒருவர் குற்றம்சாட்டி அடையாளப் போராட்டம் நடத்தி வருகிறார்.

’98இல் திமுக அரசால் ஏமாற்றப்பட்டேன்.., இன்று வரை பலனில்லை..!’- சாமானியர் ஆதங்கம்

author img

By

Published : May 10, 2022, 10:25 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையாமுத்தூர் ஊராட்சி சின்ன உடையாமுத்தூரில் 1998ஆம் வருடம் கலைஞர் ஆட்சியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பள்ளிக்கூடம், பூங்கா, நியாய விலைக்கடை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் நாலாவது சமத்துவபுரம் கட்டப்பட்டது.

அப்போது தலா 5 சென்ட் நிலப்பரப்பில் 100 வீடுகள் அடங்கிய சமத்துவபுரம் கட்டுவதற்கு அரசு தரப்பில் சுமார் 11 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இந்நிலையில், போதுமான நிலம் இல்லாததால் பற்றாக்குறையாக உள்ள சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் உள்ள லட்சுமி மற்றும் தண்டபாணி என்பவர்களிடமிருந்து சமத்துவபுரம் கட்டுவதற்கு நிலம் வழங்கினால், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் ஒரு வீடு மற்றும் நிலத்திற்கு உரிய அரசு மதிப்பில் பணம் என சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயும் வழங்குவதாகக் கூறி நிலத்தை எழுதி வாங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் கூறியதை நம்பி சமத்துவபுரம் கட்டுவதற்கு ஒன்றரை ஏக்கர் நிலத்தை சுப்பிரமணி மகன் தண்டபாணி என்பவர் எழுதிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் சுமார் 25 வருடங்கள் கழிந்தும் அன்றைக்கு அரசு அலுவலர்கள் கூறிய ஒரு பலனையும் தான் அடையவில்லை என்றும் தமிழ்நாடு அரசு உடனடியாக தனக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்றும் கூறி, சமத்துவபுரம் பகுதியிலேயே உள்ள பூங்காவில் குடிசை போட்டு குடும்பத்துடன் குடித்தனம் நடத்தி அடையாளப் போராட்டம் நடத்தி வருகிறார்.

’98இல் திமுக அரசால் ஏமாற்றப்பட்டேன்.., இன்று வரை பலனில்லை..!’- சாமானியர் ஆதங்கம்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தண்டபாணி கூறுகையில், “என்னுடைய தாத்தா தலையன் என்கிற சாமுடி காலத்தில் சுமார் 125 வருடத்திற்கு முன்பு 9 ஏக்கர் நிலப்பரப்பிற்கு பட்டா வழங்கப்பட்டது. பின்பு என்னுடைய தாத்தாவிற்கு என்னுடைய தந்தை சுப்பிரமணி ஒரே பிள்ளை என்பதால் தாத்தா பெயரில் இருந்த நிலம் முழுவதும் தந்தை சுப்பிரமணி பெயருக்கு மாற்றப்பட்டது.

அதற்குப் பின்பு என்னுடைய தந்தை எனக்கும் என்னுடைய சகோதரர்கள் ஆறுமுகம், சிவானந்தம், ஜீவா ஆகியோருக்கு தலா இரண்டரை ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் தான் 1998ஆம் வருடம் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது என்னுடைய நிலப்பரப்பிற்கு அருகில் சமத்துவபுரம் கட்டப்பட்டது. அப்போது நிலப் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு அலுவலர்கள் என்னுடைய ஒன்றரை ஏக்கர் நிலத்தை சமத்துவபுரம் கட்டுவதற்கு கொடுத்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் சமத்துவபுரத்தில் ஒரு வீடு கொடுப்பதாகவும் கூறி நம்ப வைத்து நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டார்கள்.

25 வருடங்கள் கழிந்தும் இன்றுவரை அரசாங்கத்தின் மூலம் எனக்கு கிடைக்க வேண்டிய எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக அனைத்து துறை சார்ந்த அலுவலர்களிடமும் முறையிட்டு விட்டேன். முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு கூட மனு கொடுத்து விட்டேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை.

எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் மூன்று ஆண் பிள்ளைகள் என ஐந்து பிள்ளைகள் உள்ளனர். தற்பொழுது என்னுடைய பிள்ளைகள் எல்லாம் திருமண வயதிற்கு வந்துவிட்டார்கள். கூலி வேலை செய்துவரும் நான் மேலும் அவர்களைப் படிக்க வைக்கவும் திருமணம் செய்து வைக்கவும் முடியாமல் தவித்து வருகிறேன். என்னுடைய மகள் சந்தியா என் குடும்பத்தில் முதல் பெண் பட்டதாரி. அவளுக்குக் கூட அரசு வேலை கிடைக்கவில்லை.

சாவதைத் தவிற வேற வழியில்லை..! மேலும், இந்த இடைப்பட்ட காலகட்டங்களில் சரியான தகுதி இருந்தும் பணி வழங்கும் ஆணையில் எங்கள் பெயர் இருந்தும் எனக்கு கிடைக்க இருந்த சிப்பந்தி வேலையையும் மற்றும் என்னுடைய பிள்ளை சாமுண்டிக்கு கிடைக்கவேண்டிய ஊராட்சி செயலர் வேலையையும் வழங்காமல் பணம் படைத்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள். எனவே தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சமத்துவபுரத்தில் உள்ள பூங்கா பகுதியில் குடிசை போட்டு குடும்பத்துடன் குடித்தனம் நடத்தும் போராட்டத்தை தொடங்கி இருக்கிறேன்.

உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுக்கு தீர்வு கொடுக்கும் விதமாக துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் சாவதை விட எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கூறினார்.

மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசே ஒரு சாமானிய மனிதனின் நிலத்தை பிடுங்கிக்கொண்டு அவர்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக வைத்திருப்பதை சமூக ஆர்வலர்கள் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் கருணாநிதி படத்திறப்பு விழா சிறப்பு மலர் வெளியீடு.. புறக்கணித்த அதிமுக, பாஜக...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.