சென்னை அருகே நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்குமார். இவர் தனது நண்பர் ரமேஷ் குமாருடன் சேர்ந்து விருகம்பாக்கத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டி, தனது நண்பர்களோடு பாலியல் வன்கொடுமை செய்தும், 3 சவரன் தங்க சங்கிலியையும் பறித்துள்ளனர்.
இச்சம்பவம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவர விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவல் துறையினர் நகைப் பறிப்பு புகாரை மட்டும் பெற்றுக் கொண்டு, ஹரிஸ்குமார் மற்றும் ரமேஷ்குமாரிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் இவ்வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிரித்துக்கொண்டே சிறை சென்ற காவல் உதவி ஆய்வாளர்