ETV Bharat / state

பைக் மீது லாரி மோதியதில் அடுத்த மாதம் திருமணமாகவுள்ள காதல் ஜோடி பலி! - இருசக்கர வாகன விபத்து

சென்னையில் லாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த காதல் ஜோடி

author img

By

Published : Dec 9, 2022, 10:44 PM IST

சென்னை: அரும்பாக்கம் 100 அடி சாலை மெட்ரோ ரயில் சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனைப் பார்த்து அச்சமடைந்த லாரி ஓட்டுநர் அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற போது, அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இறந்து போன பெண் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாபிலோனா( 23) என்பதும் இவர் பி.இ படித்துவிட்டு சென்னை கிண்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து, ஜாபர்கான் பேட்டையில் வசித்து வருவதும் தெரியவந்தது. அதேபோல உயிரிழந்த ஆண் நபர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பிரசாத்(33) என்பதும் இவர் குன்றத்தூர் பகுதியில் டிசைனர் இன்ஜினியர் ஆக பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் காவல்துறையினர் விசாரணையில், பாபிலோனா மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடங்களாகக் காதலித்து வருவதுள்ளனர். இவர்களது காதல் விஷயம் வீட்டிற்குத் தெரிந்து பெற்றோர்கள் சம்மதத்தோடு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று, அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் திருமண வேலைக்காக இருவரும் ஒன்றாகச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிய போது விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பொன்னன் (42) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அடுத்த மாதம் பாபிலோனா மற்றும் பிரசாத் ஆகியோரின் திருமணத்திற்காகப் அழைப்பிதழ் மற்றும் திருமண வேலைகளைப் பார்த்து வந்த நிலையில் இப்படி ஒரு சோக சம்பவம் நிகழ்ந்து விட்டதாக, அவர்களது உறவினர்கள் வேதனையுடன் புலம்பியது காண்போரைக் கண்கலங்க வைத்தது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கிய பெரியம்மாவை காப்பாற்ற சென்ற சிறுவனும் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.